சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், 'உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியா அல்லது கூட்டணியா என்பதை பாஜக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். அதைப் பற்றி கருத்து சொல்ல முடியாது' என்றார்.
தொடர்ந்து, 'மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க ஒரு மாதம் காலம் அவகாசம் கொடுத்தும் காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், ஆகிய கட்சிகளால் ஆட்சி அமைக்க முடியவில்லை. மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சி அமையவேண்டும் என்ற கவலை இருந்தது, அந்த நிலையில்தான் பாஜக ஆட்சி அமைத்து உள்ளது' எனக் கூறினார்.
மேலும், 'குருமூர்த்தி மதிக்கத்தக்க பெரிய மனிதர் அவரிடம் பலர் பல கருத்துகளை கேட்டு இருக்கலாம், குருமூர்த்தி பன்னீர்செல்வம் என்ன பேசினார்கள் என்பது எனக்குத் தெரியாது' என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டில் வெற்றிடம் உள்ளது - பொன். ராதாகிருஷ்ணன் பளீர்!