முன்னாள் அதிமுக அமைச்சரான மணிகண்டன் மீது துணை நடிகை ஒருவர் பாலியல் புகார் அளித்திருந்தார். அதன் அடிப்படையில் மணிகண்டன் மீது கட்டாய கருக்கலைப்பு உட்பட ஆறு பிரிவுகளின் கீழ் அடையாறு அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குபதிவு செய்தனர்.
இந்நிலையில், மணிகண்டன் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவானார். இதனிடையே மணிகண்டன் முன் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
மணிகண்டன் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் நிலையில், மதுரையில் குடும்பத்துடன் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், இரண்டு தனிப்படை காவல்துறையினர் மதுரைக்கு விரைந்தனர்.
இதேபோல் மணிகண்டனின் தற்போதைய, ஓட்டுநர், உதவியாளர் ஆகியோரின் செல்போன் எண்ணும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களும் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. தலைமறைவாக உள்ள மணிகண்டன், உதவியாளர்களையும் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் சிக்கிய முன்னாள் அமைச்சர்: மதுரை விரைந்த தனிப்படை!