ETV Bharat / state

அமைச்சர்கள் அறிக்கையினால் குழந்தைக்கு கை கிடைத்துவிடுமா? - ஜெயக்குமார் கேள்வி!

குழந்தைக்கு கை அகற்றப்பட்ட விவகாரத்தில், அமைச்சர்கள் மூன்று பேரும் ஒன்று கூடி குழு அறிக்கை கொடுத்தால் அந்த குழந்தைக்கு கை கிடைத்து விடுமா? என முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் காட்டம் தெரிவித்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jul 4, 2023, 9:52 PM IST

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் இன்று (ஜூலை 04) எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில், வலது கை மூட்டுப் பகுதிக்கு மேல் வரை அகற்றப்பட்டு சிகிச்சைப் பெற்று வரும் ஒன்றரை வயது குழந்தையை நேரில் சந்தித்தனர். மருத்துவ சிகிச்சைகள் குறித்து குழந்தையின் பெற்றோரிடம் கேட்டு அறிந்து, நலம் விசாரித்தனர்.

திமுக ஆட்சியில் மக்களின் நம்பிக்கை போனது: பின்னர், அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "அதிமுக ஆட்சியில் தமிழ்நாடு, மருத்துவத்தில் வெல்த் மாநிலமாக இருந்தது. தமிழ்நாட்டில் சென்னை மருத்துவத் தலைநகராக விளங்கியது. திமுகவின் இரண்டு ஆண்டு ஆட்சியில் மருத்துவத்துறை மோசமாக உள்ளது. ஆனால், அதிமுக ஆட்சி காலத்தில் மருத்துவத்துறை மிகப் பெரிய வளர்ச்சி அடைந்தது. மருத்துவர்கள் உணவின்றி உறக்கமின்றி அரசின் எண்ணங்களை 24 மணி நேரமும் நிறைவேற்றினர். அதிமுக ஆட்சி காலத்தில் அரசு மருத்துவமனை மீது மக்களுக்கு நம்பிக்கை இருந்தது. ஆனால், திமுக ஆட்சியில் மக்களுக்கு அரசு மருத்துவமனை மீது நம்பிக்கை கிடையாது.

அடுத்தடுத்து நடக்கும் தவறான சிகிச்சை; அமைச்சர் என்ன செய்கிறார்?: வடசென்னையைச் சேர்ந்த பிரியா என்ற மாணவிக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் உயிரிழந்த நிகழ்வு இரண்டு மாதத்திற்கு முன் நடந்தது. குழந்தைகள் நல மருத்துவமனையில் தலைமை காவலரின் மகளுக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதால் குழந்தையின் கால் செயல் இழந்தது. இதைத்தொடர்ந்து அரசு மருத்துவமனைகளில் தவறான சிகிச்சையின் காரணமாக, இது போன்ற மோசமான நிகழ்வுகள் நடைபெற்ற வருகின்றன. இத்தைகைய தவறான சிகிச்சையின் காரணமாக, 2 ஆண்டுகளில் நிறைய பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இத்துறை அமைச்சர் முழுமையான கவனம் செலுத்துவதன் மூலம் எந்த பிரச்னையும் வர வாய்ப்பு கிடையாது.

தாயின் கருத்தை கொச்சைப்படுத்துவதா?: ஆனால், அமைச்சர் சுப்பிரமணியன் முழுமையாக அக்கறை எடுத்து குழந்தைக்கு சிகிச்சை செய்திருந்தால், கை இழந்து இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டு இருக்காது என்று குற்றம் சாட்டினார். அந்த குழந்தையின் தாயின் கருத்தை கொச்சைப்படுத்தும் வகையில் அமைச்சர் பதில் கூறியுள்ளதாகவும், இது போன்ற சூழல் வரும் பொழுது நடவடிக்கைகளை அரசு முன்னால் எடுக்க வேண்டும் என்றும் விழிப்போடு இருந்தால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செந்தில் பாலாஜியை பார்க்க பிற அமைச்சர்கள் உண்டு; ஏழைகளைப் பார்க்க யாருண்டு?: தற்போது அமைத்துள்ள 3 பேர் குழு அறிக்கை கொடுத்தால் அந்த குழந்தைக்கு கை கிடைத்துவிடுமா? என்று அவர் கேள்வியெழுப்பி உள்ளார். குழந்தையின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு 50 லட்சம் ரூபாய் அரசு நிதி வழங்க வேண்டும் என்று அவர் வலிறுத்தியுள்ளார். இதனிடையே, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜியை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் தினந்தோறும் சென்று பார்த்து வந்ததாக கூறிய அவர், அரசு மருத்துவமனைக்கு வரும் ஏழை எளிய மக்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுகிறதா? என்பதை பார்க்கத் தவறிவிட்டதாகவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக குற்றம்சாட்டினார்.

பறிபோன குழந்தையின் கைகள்; அமைச்சரே பொறுப்பு?: இவரைத்தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், “எடப்பாடி ஆட்சி காலத்தில் மருத்துவத்துறை நம்பர் ஒன்றாக இருந்தது. தற்போது சுகாதாரத்துறை ஐசியூவில் இருக்கின்ற நிலைமை தான் உள்ளதாகவும் தூங்கிக் கொண்டிருக்கின்ற நிலைமையில் தான் தற்போது சுகாதாரத்துறை உள்ளதாகவும் சாடினார். மேலும், முழுமையாக இது அரசினுடைய குற்றம் என்றும் அத்துறையினுடைய குற்றம் என்று குற்றம்சாட்டியதோடு, இந்த விவகாரத்தில் விசாரணைக் குழு, அறிக்கை சமர்ப்பிப்பது ஏற்புடையது அல்ல என்றார். வலியில் வரும் குழந்தைக்கு ஆறுதல் சொல்ல வேண்டியது அமைச்சரின் பொறுப்பு என்று தெரிவித்தார்.

சப்பைக் கட்டுக்கட்டி தவறை மறைப்பதா?: ஆனால், அமைச்சர் குழந்தையின் தாயை கொச்சைப்படுத்தும் அளவிற்கு பேசியுள்ளதாகவும், இரண்டு கையாக வந்திருக்கக்கூடிய குழந்தையை ஒரு கையாக மாற்றி வைத்துள்ள அரசு தான் 'திராவிட மாடல்' அரசு என்று விமர்சித்தார். இந்த விவகாரத்தில், அமைச்சர் சப்பைக்கட்டு கட்டி முட்டுக் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர், இந்தத் துறையை சீர்படுத்த வேண்டும் என்ற நிலைமைக்கு தான் தற்போது இந்த அரசாங்கம் உள்ளதாக கூறியுள்ளார்.

தவறுக்கு பொறுப்பு யார்?: இதுபோன்று இனிமேல், தவறு நடக்காமல் இந்த தவறுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்க வேண்டும் என்றும் துறையை தலைமையேற்று நடத்துபவர்கள் திறம்பட இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மருத்துவர்கள், மருத்துவமனைகள் சிறந்ததாக இருப்பினும், அவற்றை திறம்பட ஏற்று நடத்த முடியவில்லை என்றார். தற்போது இருக்கக்கூடிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறனற்ற அமைச்சராக உள்ளதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார். செவிலியர்கள் ட்ரிப்ஸ் போடும்போது தான் தவறு ஏற்பட்டுள்ளதாக குழந்தையின் தாய் தெரிவித்தார். முறையாக கவனித்து இருந்தால் குழந்தையின் கையை அகற்றக்கூடிய சூழல் ஏற்பட்டு இருக்காது என்று அவர் கூறினார்.

முறையான விசாரணை வேண்டும்: குழந்தைக்கு சிகிச்சை வழங்கி முறையாக பராமரிக்காதது தான் குழந்தை பாதிக்க காரணம் என்று குற்றம்சாட்டிய அவர், குழந்தைக்கு முறையாக சிகிச்சை அளிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்தியுள்ளார். மேலும், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற இந்த தவறை விசாரிக்க, அரசு மருத்துவர்களை நியமிப்பது ஏற்புடையது அல்ல என்று தெரிவித்துள்ளார். மருத்துவத்துறையில் முறையாக ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்படுவதில்லை என்று குற்றம்சாட்டிய முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மிகப்பெரிய கட்டமைப்புடன் இயங்கும் தமிழ்நாடு மருத்துவத்துறையை முறையாக பராமரிக்கவில்லை” என விமர்சித்துள்ளார்.

இதையும் படிங்க: குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: தாய் கண்ணீர் மல்க பேட்டி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.