ETV Bharat / state

ஓபிஎஸ் நீக்கப்பட்டதற்கான காரணத்தை உடைத்த ஜெயக்குமார்

author img

By

Published : Mar 4, 2023, 3:32 PM IST

முட்டாளின் மூளையில் 300 பூ மலரும் என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ்ஸை விமர்சனம் செய்த ஜெயக்குமார்
ஓபிஎஸ்ஸை விமர்சனம் செய்த ஜெயக்குமார்

சென்னை: எடப்பாடி பழனிசாமி என்கிற நம்பிக்கை துரோகியை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சனம் செய்திருந்தார். இதற்கு பதிலடியாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "அதிமுக என்னும் மாபெரும் மக்கள் இயக்கத்தை திமுகவிடம் அடகு வைக்கவும், தனித் தன்மையை சீர்குலைக்கவும் முயலும் ஜீரோ பன்னீர்செல்வத்திற்கு கடும் கண்டனம்.

ஜெயலலிதா மறைவுக்குப் பின், ஓ.பன்னீர்செல்வத்தின் ஒவ்வொரு செயல்பாடுகளும் முட்டாளின் மூளையில் முன்னூறு பூ மலரும் என்பதை நிரூபிக்கும் வகையில் உள்ளன. அவரை உருவாக்கிய மாபெரும் இயக்கத்தை அழிக்க சதித் திட்டமிட்டு, நம் பரம்பரை எதிரி தீயசக்தி திமுகவோடு சேர்ந்து செயல்படும் துரோகி ஓ. பன்னீர்செல்வம்.

எடப்பாடி பழனிசாமி குறித்து ஓபிஎஸ் தனது அறிக்கையில் விரக்தியின் உச்சியில் உளறியுள்ளார். சட்டமன்றத்தில், ஜெயலலிதா அரசை எதிர்த்து வாக்களித்து துரோகம் செய்த பின், பதவி சுகத்திற்காக தேடி வந்த ஓ. பன்னீர்செல்வத்தை அரவணைத்து துணை முதலமைச்சராக மட்டுமல்ல, கட்சியின் ஒருங்கிணைப்பாளராகவும் ஆக்கியவர் எடப்பாடி பழனிசாமி.

உடனிருந்தே தொல்லை கொடுக்கும் வியாதி போல், பல்வேறு துரோகச் செயல்களில் ஈடுபட்டதையும் பொறுத்துக் கொண்டார். இந்த சுயநலவாதி திருந்துவார் என்று காத்திருந்த நிலையில், தன் மகனை, முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்திக்க வைத்து, பாராட்டுப் பத்திரம் படிக்க வைத்து, சரணாகதி அடைந்ததை அறிந்த பின்புதான் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுத்தார்.

தீய சக்தி திமுக எதிர்ப்பு என்ற நமது தொப்புள் கொடி கொள்கையை சீர்குலைக்க, இந்த சுயநலவாதி முயன்றதை உணர்ந்ததால் தான் ஒட்டுமொத்த இயக்கமும் எடப்பாடி பின்னால் அணிவகுத்து நின்றது. வெறும் நான்கு பேருடன், வாயை வாடகைக்கு விடும் ஒருசிலரை மட்டுமே வைத்துக்கொண்டு, எடப்பாடியின் தனித் தன்மையை சீர்குலைக்க முயன்ற இவர், தன் நிலை அறியாமல், தன்னை மறந்து புத்தி தடுமாறி தாறுமாறாக உளறி வருகிறார்.

நடந்து முடிந்த ஈரோடு (கிழக்கு) தொகுதிக்கான இடைத் தேர்தலில், ஆளும் கட்சி ரூபாய் 360 கோடியைக் கொட்டி, மக்களை பட்டியில் அடைத்து நம்மிடமிருந்து தட்டிப் பறித்த வெற்றியை, இந்த துரோகி கொண்டாடுவது வெட்கக்கேடு, நாம் நடத்திய புனித வேள்வியில், தர்மம் காக்க உண்மைத் தொண்டர்களின் துணையுடன் களமாடிய, அதிமுக மீது அசைக்க முடியாத பற்றுகொண்ட 44 ஆயிரம் பேர் வாக்களித்தது தான் உண்மையான வெற்றி.

இந்த இடைத் தேர்தலில் கழகத்திற்கு டெபாசிட் கூட கிடைக்கக் கூடாது என்ற தனது எண்ணத்தில் மண்விழுந்த ஆத்திரத்திலும், தன் அரசியல் வாழ்வு இப்படி சூனியமாகிபோய்விட்டதே என்ற ஆற்றாமையிலும் பித்துக்குளிபோல் உளறத் துவங்கி உள்ளார் பன்னீர்செல்வம். இதுவரை இவரைப்பற்றி தவறாக ஒரு வார்த்தைகூட எடப்பாடி சொன்னதில்லை. இவர் செய்த பல்வேறு துரோகங்களை பெரிதுபடுத்தாமல் இந்த இயக்கத்தை கட்டிக் காக்கும் தியாக வேள்வியில் ஈடுபட்டு வருகிறார்.

ஈரோடு (கிழக்கு) தொகுதியில் முறையாக ஒரு வேட்பாளரைக் கூட நிறுத்த முடியாத இந்த காகிதப் புலி, அவராலேயே குற்றம் சாட்டப்பட்ட சசிகலா வகையறாவையும் சேர்த்தால்தான் இயக்கம் வலுப்பெறும் என்ற மாய விதையை விதைக்க ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து முயன்று வருகிறார். இவருக்கும், இவரைச் சார்ந்தவர்களுக்கும் தகுதி, திறமை இருந்தால் தனிக்கட்சி துவங்கி எடப்பாடியுடன் அரசியல் ரீதியாக மோதிப் பார்க்கட்டும்.

அதைவிடுத்து, தனி மனிதத் தாக்குதலில் ஈடுபட்டால் கைகட்டி வேடிக்கைப் பார்க்க உண்மையான அதிமுக தொண்டர்கள் கோழைகள் அல்ல என்று எச்சரிக்கிறேன். எம்.ஜி.ஆர் உருவாக்கிய மாபெரும் மக்கள் இயக்கத்தை அழிக்க நினைக்கும் உங்களை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரது ஆன்மா என்றுமே மன்னிக்காது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: "வடமாநிலத் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரப்புவோர் இந்தியாவுக்கு எதிரானவர்கள்" - முதலமைச்சர் ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.