ETV Bharat / state

தமிழ்நாடு அரசு வெறும் வாய்ச்சவடால் தான், செயலில் ஒன்றும் கிடையாது - ஜெயக்குமார் காட்டம்! - முன்னாள் முதல்வர் ஜெயலலிதா

ஆதித்தனாரின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், திமுக மீது பிரதமர் விமர்சனம் வைத்திருப்பது வரவேற்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

ஆதித்தனாரின் 89 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது அலுவலகத்தில் மாலை செலுத்திய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்

author img

By

Published : Aug 11, 2023, 6:10 PM IST

சென்னை: தனியார் நாளிதழ் நிறுவனர் ராமச்சந்திர ஆதித்தனாரின் 89வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அதன் அலுவலகத்தில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு உள்ள அவரது திருவுருவப் படத்திற்கு அதிமுக சார்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், "ராமச்சந்திர ஆதித்தனாரை பொறுத்தவரை பழகுவதற்கு இனிமையானவர், பண்பானவர்.

பெரிய பத்திரிக்கையாளர் என்ற ஒரு வகையில் எல்லோரிடமும் நல்ல மனதோடு ஒரு பண்பாளராக, பாச உணர்வுமிக்கவராக, ஒரு சகோதரராக பழகுகிற மாண்பை, ராமச்சந்திரா ஆதித்தனாரிடம் கண்டது உண்டு. அவரைப் பொறுத்தவரையில் பன்முகத் தன்மை கொண்டவர். விளையாட்டுத் துறையிலும், பத்திரிகை நடத்துவதிலும் அதேபோன்று ஆன்மீகம் என எல்லா துறையிலும் சிறந்து விளங்கியவர்" எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், "நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் வந்தபோது மோடியும், நிர்மலா சீதாராமனும் திமுகவை கிழி கிழி என கிழித்து உள்ளார்கள். திமுக அதிகார துஷ்பிரயோகம் செய்து கோடிக்கணக்கான கொள்ளை அடித்ததை, பிரதமர் பாராளுமன்றத்தில் பேசியது, தமிழ்நாடு அளவில் உலக புகழ் பெற்ற ஊழல் அரசாக திமுக திகழ்கிறது.

1989 ஆம் ஆண்டு கால கட்டத்தில் மார்ச் 25ஆம் தேதியில் ஜெயலலிதாவின் சேலையை பிடித்து இழுத்து, எவ்வளவு அவமானப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப்படுத்தி, கேவலப்படுத்தி இருப்பதை நாட்டு மக்கள் என்றும் மறந்துவிட முடியாது. அதற்கு தக்க பாடம் புகட்டுவதற்காக மீண்டும் சட்டமன்றத்தில் முதலமைச்சராக வந்து, பெரிய அளவுக்கு சாதனையை ஜெயலலிதா படைத்தார். பெண் என்றும் பாராமல் அவமானப்படுத்தி பெண்மையை இழிவுபடுத்திய திமுக அரசுக்கு அன்றைக்கே பாடம் கொடுத்தவர் ஜெயலலிதா.

எப்போதும் திமுகவில் பெண்களுக்கு மதிப்பு இல்லை. நிர்மலா சீதாராமன் திமுகவை குறித்தும் துரைமுருகன் குறித்தும் கூறிய கருத்து வரவேற்கத்தக்கது. தமிழ்நாடு அளவில் திமுக குறித்து அதிமுக பேசிய நிலையில், இந்திய அளவில் பிரதமர் மோடி திமுக குறித்து விமர்சனம் வைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

மணிப்பூர் பொறுத்தவரை மணிப்பூரில் இரண்டு சமூகத்தினர் இடையே சுமூக நிலை நிலவ வேண்டும் என்பது அனைவரின் கருத்து. அதுதான் எங்களின் நிலை. மணிப்பூர் கலவரத்தில் பெண்களை இழிவுபடுத்தியவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்க வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்துவிட்டு மீனவர்கள் மாநாட்டில் பங்கேற்பது ஏற்புடையதல்ல. இன்று தமிழகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு கலாச்சாரம் தலை தூக்கி நிற்கிறது. சர்வாதிகாரம் என்று சொல்லிக்கொண்டு இரண்டு வருடத்தில் போதை வஸ்துக்கள் அனைத்தும் நடைமுறையில் தான் உள்ளது.

தமிழ்நாடு அரசை பொறுத்தவரை வாய்ச்சவடால் தான், செயலில் ஒன்றும் கிடையாது. இந்த அரசுக்கு திறமை இல்லை, வாய் தான் உள்ளது. தமிழ்நாட்டில் இந்தி சமஸ்கிருதம் படிக்க முடியாத நிலை இருந்தது என நிர்மலா சீதாராமன் கூறியது அவரது கருத்து. இந்தி, சமஸ்கிருதம் எந்த விதத்திலும் நுழையாது என்பதில் அதிமுக உறுதியாக உள்ளது. எங்களுடைய கருத்தை பொறுத்தவரை இந்தியை தமிழகத்தில் எந்த நிலையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழ்நாட்டில் இரு மொழி கொள்கைதான். தமிழ்நாட்டில் இந்தியை எந்த வடிவிலும் நுழைய அனுமதிக்க மாட்டோம்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.