ETV Bharat / state

ஜெயகுமார் ஜாமீன் வழங்க எதிர்ப்பு: வழக்கை ஒத்தி வைத்த நீதிபதி - சென்னை உயர் நீதிமன்றம்

முன்னாள் அமைச்சர் ஜெயகுமாருக்கு எதிரான நில அபகரிப்பு வழக்கில் அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.

ஜெயக்குமாரின் ஜாமீன் மனு 11ம் தேதிக்கு ஒத்திவைப்பு, ஜெயகுமார் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
ஜெயகுமார் ஜாமீன் மனு ஒத்திவைப்பு
author img

By

Published : Mar 8, 2022, 12:47 PM IST

சென்னை துரைப்பாக்கதில் 8 கிரவுண்ட் நில உரிமை தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மருமகனான நவீன்குமார் என்பவருக்கும், அவரது சகோதரர் மகேஷ்குமார் என்பவருக்கும் பிரச்சினை இருந்துவந்தது. முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், தனது செல்வாக்கைப் பயன்படுத்தி அடியாட்கள் மூலம் மிரட்டி நிலத்தை அபகரித்துக் கொண்டதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மகேஷ் குமார் காவல்நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பான வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு மார்ச் 11 வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவரது ஜாமீன் மனுவை செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார்.

அவரது மனுவில், தனது மருமகன் நவீன்குமாரும், அவரது சகோதரர் மகேஷு பங்குதாரர்களாக உள்ள மீன்பிடி வலை தயாரிக்கும் நிறுவன நிர்வாகத்தில்கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் பிரிந்துவிட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான சிவில் வழக்கு ஆலந்தூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளபோது, எவ்வித தொடர்பும் இல்லாத தான் கைது செய்யப்பட்டிருப்பதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆளுங்கட்சியைச்சேர்ந்த மகேஷ் குமாரின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகத்தன்னை இந்த வழக்கில் தவறாக இணைத்துள்ளதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் அமைச்சரான தனது நற்பெயருக்கு ஊறு விளைவிக்கும் நோக்குடன் பதிவான வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ளதால், ஜாமீன் வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி ஜெகதீஷ்சந்திரா முன்பு இன்று (மார்ச்.8) விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை மற்றும் மகேஷ்குமார் தரப்பில் ஜாமீன் வழங்கக் கூடாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, காவல்துறை மற்றும் மகேஷ்குமார் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (மார்ச் 11) நீதிபதி ஒத்திவைத்தார்.

இதையும் படிங்க: 'ரஷ்யா - உக்ரைன் போருக்குக்கூட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரே காரணமென வழக்கு போடலாம்' - ஜெயவர்தன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.