அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (ஜூலை 9) அறிவிப்பு ஒன்று வெளியிட்டனர்.
கட்சியிலிருந்து முன்னாள் செயலாளர் நீக்கம்:
அதில், “கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்டக் கழக முன்னாள் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ப. இளவழகன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
தலைமை முன்னாள் கொறடா நீக்கம்:
அதேபோல், திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த P.M. நரசிம்மன், (அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர், ஆர்.கே. பேட்டை ஒன்றியக் கழகச் செயலாளர் அரசு தலைமை முன்னாள் கொறடா) அகியோர் இன்று (ஜூலை 9) முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்.
கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது எனக் கேட்டுக்கொள்கிறோம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: அப்போதே மகேந்திரன் வந்திருந்தால் கோவையையே வென்று இருப்போம் - ஸ்டாலின்