2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப. சிதம்பரம், அதிமுக வேட்பாளர் ராஜகண்ணப்பனை விட, 3,354 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார். சிதம்பரத்தின் வெற்றியை எதிர்த்து ராஜகண்ணப்பன் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ப. சிதம்பரம் நேரில் ஆஜராகி சாட்சிக் கூண்டில் ஏறி சாட்சியம் அளித்தார். அப்போது, அவரிடம் ராஜகண்ணப்பன் தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை செய்தார்.
அப்போது, தேர்தல் பிரச்சாரம் முடிந்த பின்பு கார்த்தி சிதம்பரம் தொகுதிக்குச் சென்றது குறித்தும், ஓட்டுக்குப் பணம் வழங்கப்பட்டதா என்பது குறித்தும் சிதம்பரத்திடம் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அந்தக் குற்றச்சாட்டுகளை சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்தார். குறுக்கு விசாரணை நீண்ட நேரம் தொடர்ந்ததால், விசாரணையை மார்ச் 9ஆம் தேதிக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: உயர் நீதிமன்ற உத்தரவு: குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!