ETV Bharat / state

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை - சம்பவம் நடந்த அன்றே திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு? - திமுக நிர்வாகிகள் மீது வழக்கு

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட அன்றே திமுக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.

Former
Former
author img

By

Published : Jan 6, 2023, 1:39 PM IST

சென்னை: சென்னை புதுப்பேட்டை ஆயுதப்படை வளாகத்தில், சென்னை காவல், காவலர், பல்பொருள் அங்காடியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள லிஃப்ட், தொடுதிரை, ஆன்லைன் பேமென்ட் உள்ளிட்ட வசதிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தொடுதிரை வசதி தொடக்கம்
தொடுதிரை வசதி தொடக்கம்

இதனை காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஷ்குமார் யாதவ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு, "கடந்த ஒராண்டில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. அனைத்து காவல்துறையினரின் கடும் உழைப்பில் தமிழ்நாட்டில் அமைதி நிலை நிறுத்தப்பட்டு வருகிறது. கடந்த ஒரு ஆண்டில் 250 காவல்துறையினர் பணியின் போது உயிரிழந்துள்ளனர் - அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு பணி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

முதன்முறையாக இரவு ரோந்து செல்லும் காவலர்களுக்கு சிறப்பு படி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது காவலர்கள் மத்தியில் புத்துணர்வை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் கடத்தலை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை மிகச்சிறப்பாக செயல்பட்டு வருகிறது- கஞ்சா வேட்டை 1.0, 2.0, 3.0 போன்ற திட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. வெளி நாடுகளிலிருந்து போதைப்பொருள் கடத்தப்படுவதை தடுக்க பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று கூறினார்.

விருகம்பாக்கம் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக நிர்வாகிகளை கைது செய்வதற்கு ஏன் தாமதமானது? என்ற கேள்விக்கு பதிலளித்த டிஜிபி சைலேந்திர பாபு, "பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த அன்றே வழக்குப்பதிவு செய்யப்பட்டது. உடனடியாக விசாரணை நடத்தப்பட்டு கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது" என்றார்.

பெண் காவலருக்கு கடந்த டிசம்பர் 31ஆம் தேதி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட நிலையில், கடந்த 3ஆம் தேதி திமுக நிர்வாகிகள் இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்னரே அவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: என்ஐஏ வெளியிட்ட அதிர்ச்சிகரமான புள்ளி விவரம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.