ETV Bharat / state

கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மறைவு: ஸ்டாலின் அஞ்சலி

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ன நினைக்கிறார், என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை எல்லாம் உணர்ந்து அவருக்கு நிழலாகவே இருந்தவர், சண்முகநாதன். இவரது மறைவையடுத்து, அஞ்சலி செலுத்த சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்.

கலைஞரின் நிழல் சண்முகநாதன் மறைவு
கலைஞரின் நிழல் சண்முகநாதன் மறைவு
author img

By

Published : Dec 21, 2021, 9:48 PM IST

Updated : Dec 22, 2021, 6:13 AM IST

சென்னை: முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உதவியாளராகப் பணிபுரிந்த சண்முகநாதன் (80), உடல் நலக்குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று மாலை (டிச.21) காலமானார்.

யார் இந்த சண்முகநாதன் ?

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி என்ன நினைக்கிறார், என்ன சொல்ல விரும்புகிறார் என்பதை எல்லாம் உணர்ந்து செயல்பட அவருக்கு உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். கருணாநிதியின் நம்பிக்கைக்கும் நாணயத்துக்கும் உரியவராக விளங்கி அவரின் நிழலாகவே வாழ்ந்தவர் சண்முகநாதன். இவர் 48 ஆண்டுகளுக்கும் மேலாகக் கருணாநிதியின் நேர்முக உதவியாளராகப் பணிபுரிந்தவர்.

கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மறைவு: ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி

இதனையடுத்து, சண்முகநாதன் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார். மேலும், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அவரது இறப்பு நிகழ்வில் அமைச்சர் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினர்.

ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி
ஸ்டாலின் கண்ணீர் மல்க அஞ்சலி

நீ உனது பணிகளைக் கவனி

இதனிடையே, சண்முகநாதன் மறைவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், "அருமை அண்ணன் சண்முகநாதன் மறைவுச் செய்தி எனக்குத் தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது. நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, “அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி” என்று உரிமையோடு சொன்னார்.

அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை.

சண்முகநாதன் திருமண நிகழ்வில் ஸ்டாலின், அழகிரி

சண்முகநாதனின் மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் ஸ்டாலின்

அவரின் திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றது, மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தது என்று அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். இன்று அவரை இந்தக் கோலத்தில் பார்க்கும் சூழல் வந்துவிட்டதே!

  • முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்!

    உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக அவர் நீடு வாழ்வார்!https://t.co/EsVd4fhLD8 pic.twitter.com/4eRcKhXxx1

    — M.K.Stalin (@mkstalin) December 21, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும்

அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன்.

'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார், தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவார். அத்தனையிலும் அவரது அன்பும், என் மீதான பாசமும், கருணாநிதி மீதான மரியாதையும்தான் பொங்கி வரும்.

கலைஞரின் நிழல் சண்முகநாதன் மறைவு
கருணாநிதியின் நிழல் சண்முகநாதன் மறைவு

உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி கருணாநிதியின் நிழலாக இருந்தவர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள். கருணாநிதி அவர்களுக்கு இன்னொரு கையாக இருந்தவர் அவர். சுமார் 50 ஆண்டுகாலம் கருணாநிதியோடு பயணித்தவர் அவர். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும் கோபாலபுரம் வீட்டிலேயே இருப்பார்.

கருணாநிதியின் உதவியாளராக பணிபுரிந்த சண்முகநாதன்

நானும் அவரும் அந்த அறையில்தான் இருப்போம்

கோபாலபுரம் வீட்டிற்குள் நுழைந்ததும் வலதுபுறம் அவரின் அறை இருக்கும், அங்குள்ள கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார்.

தலைவரைப் பார்க்க கழக முன்னோடிகள் வந்தாலும், நானும் அவரும் அந்த அறையில்தான் இருப்போம். கருணாநிதியைப் பிரிந்து அவராலும் இருக்க முடியாது. அவரைப் பிரிந்து தலைவராலும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை!

கலைஞரின் நிழல் சண்முகநாதன்
கருணாநிதியின் நிழல் சண்முகநாதன்

கருணாநிதி மறைந்த பிறகும், அவர் இருந்த காலத்தில் கோபாலபுரம் வீட்டுக்கு எப்படி வருவாரோ அதேபோல் வந்து எழுதுவது, அச்சிடுவது, மெய்ப்புத் திருத்தம் செய்வது என இருப்பார்.

கருணாநிதி உடன்பிறப்புகளுக்கு எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல்வேறு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடும் அரியப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவை அனைத்தும் அச்சில் இருக்கும் நிலையில் அண்ணன் மறைந்தது அதிர்ச்சியடைய வைக்கிறது.

கோபாலபுரக் குடும்பத்தின் முக்கியமான தூண் சரிந்துவிட்டது

கருணாநிதியின் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் எழுதும் தகவல் களஞ்சியம் அவர். அரை நூற்றாண்டுகால தமிழ்நாடு அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்றுப் புத்தகம் அவர். அனைத்துக்கும் மேலாக எங்களது கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அவரை 'குட்டி பி.ஏ.' என்றுதான் அழைப்போம்.

கோபாலபுரம் வீட்டில் சண்முகநாதன்
கோபாலபுரம் வீட்டில் சண்முகநாதன்

இருப்பவர்களிலேயே அவர்தான் வயதால் இளைஞர் என்பதால் அப்படி அழைப்போம். இன்று எங்கள் அனைவருக்கும் மூத்த அண்ணன் நிலையில் இருந்தார். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது.

கருணாநிதியின் நிழல் சண்முகநாதன்
கருணாநிதியின் நிழல் சண்முகநாதன்

இந்தப் பிறவி தலைவருக்கானது

'இந்தப் பிறவி தலைவருக்கானது' என வாழ்ந்த பாசச் சகோதரனை இழந்திருக்கிறோம். 'அவர் இல்லாமல் நான் இல்லை' என்று வாழ்ந்த அன்புமனிதரை இழந்திருக்கிறோம். தன் குடும்பம் மறந்து, எங்கள் குடும்பத்துக்காக உழைத்த தியாகியை இழந்திருக்கிறோம். யாருக்கு நான் ஆறுதல் சொல்வது? என்னை நானே ஆறுதல் சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும்.

கலைஞரின் நிழல் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் மறைவு
கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்படும் சண்முகநாதன் மறைவு

அவர் நீடு வாழ்வார்

அண்ணன் சண்முகநாதன் குடும்பத்தினர் அனைவர்க்கும் அக்குடும்பத்தின் சகோதரனாக எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் அவரை அறிந்தோர் தொகை அதிகம்.

அவர் மீது பாசம் கொண்டவர் எண்ணிக்கை அதிகம். அவர்கள் அனைவர்க்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகிய நான்கின் அடையாளமாக அண்ணன் சண்முகநாதன் அவர்கள் நீடு வாழ்வார்!" எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: மு.க.தமிழரசுவின் மாமியார் ஜெயலட்சுமி காலமானார்: முதலமைச்சர் குடும்பத்துடன் அஞ்சலி

Last Updated : Dec 22, 2021, 6:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.