கரோனா ஊரடங்குக்குப் பின்னர் தற்போது சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் இயக்கப்பட்டுவருகின்றன. பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், பொதுமக்களின் தேவையைக் கருத்தில்கொண்டு போக்குவரத்துக் கழகச் சேவை செயல்படுத்தப்பட்டுவருகிறது.
மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிரபல வாசகமான, 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்ற வாசகம் ஒட்டப்பட்டு, அதற்குக் கீழ் 'புரட்சித்தலைவி அம்மா' என எழுதப்பட்டுள்ளது.
பொதுவாக சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் திருக்குறள் தவிர்த்து வேறு எந்த வாசகமும் ஒட்டப்படாத நிலையில், தற்போது முதன்முறையாக ஜெயலலிதாவின் வாசகம் ஒட்டப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஸ்டாலினின் எண்ணத்திற்கு ஏற்ப செயல்படுவோம் - க.பொன்முடி!