ETV Bharat / state

சொத்துக் குவிப்பு வழக்கு: சிறைத் தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரி அதிமுக முன்னாள் எம்எல்ஏ., மேல்முறையீடு! - சொத்துக்குவிப்பு வழக்கு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனையை எதிர்த்து, அதிமுக முன்னாள் எம்எல்ஏ., பரமசிவம் தாக்கல் செய்த மனுவுக்கு லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர் நீதிமன்றம்
Chennai high court
author img

By

Published : Apr 23, 2021, 6:39 PM IST

கடந்த 1991 முதல் 1996ஆம் ஆண்டு வரை சின்னசேலம் தொகுதி அதிமுக எம்எல்ஏ.,வாக இருந்த பரமசிவம் மீது, வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துக்கள் சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. லஞ்ச ஒழிப்பு துறை தொடர்ந்த இவ்வழக்கை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் விழுப்புரம் மாவட்ட சிறப்பு நீதிமன்றம், முன்னாள் எம்எல்ஏ., பரமசிவத்துக்கு நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும், 33 லட்சத்து 4 ஆயிரத்து 168 ரூபாய் அபராதமும் விதித்து, கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.

இத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி முன்னாள் எம்எல்ஏ., பரமசிவம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவில், கரோனா தொற்று பாதித்து சிகிச்சை பெற்று வரும் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து, ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இவ்வழக்கு நீதிபதி நிர்மல்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, லஞ்ச ஒழிப்புத் துறை தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில், 22 லட்சத்து 58 ஆயிரத்து 746 ரூபாய் சொத்து குவித்துள்ளதாகக் கூறிய நிலையில், 33 லட்சத்து 4 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்ததாக சிறப்பு நீதிமன்ற நீதிபதி முடிவுக்கு வந்தது குற்றப் பத்திரிகைக்கு முரணானது எனவும், இத்தொகை எப்படி கண்டறியப்பட்டது என்று விசாரணை நீதிமன்றம் தெரிவிக்கவில்லை எனவும், சொத்துக்கள் மதிப்பீடு செய்ததில் தவறுகள் உள்ளதாகவும், முன்னாள் எம்எல்ஏ., தரப்பில் வாதிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து இம்மனுவுக்கு வரும் 29ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.