ETV Bharat / state

வன உயிரினங்களால் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு குழு அமைக்க நடவடிக்கை - வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் பேச்சு

வன உயிரினங்களால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில், சிறப்பு குழுக்கள் அமைத்து குரங்குகளை பிடிக்கவும், வனவிலங்குகளை பாதுகாப்பாக வனப்பகுதிகளுக்கு திருப்பி அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்தார்.

அமைக்க நடவடிக்கை
அமைக்க நடவடிக்கை
author img

By

Published : Apr 25, 2022, 10:39 PM IST

சென்னை: சட்டப்பேரவையில் வனத்துறை மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் இன்று(ஏப்ரல் 25) நடைபெற்றது. விவாதத்துக்கு பதிலுரை வழங்கிப் பேசிய அத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், வன உயிரினங்கள் வனப்பகுதியை விட்டு வெளியே வராதவாறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும், மனித உயிரிழப்பிற்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை 2021-2022ஆம் ஆண்டு முதல் ரூ.4 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது என்றும், அதனை மேலும் உயர்த்த அரசு பரிசீலனை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "வன உயிரினங்களால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காத வகையில் சிறப்பு குழுக்கள் அமைத்து குரங்குகளை பிடிக்கவும், இதர வனவிலங்குகளை பாதுகாப்பான பகுதிகளுக்கு திருப்பி அனுப்பவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விளை நிலங்களில் காட்டுப்பன்றிகளால் ஏற்படும் சேதாரங்கள் அதிகரித்து வருவதால், 27 மாவட்டங்களில் வனத்துறை அலுவலர்கள் கொண்டு கண்காணிக்கப்படும். வன சரகர், வனவர் காட்டுப்பன்றிகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுவர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: பாஜகவின் ஜய்ங் ஜக் அதிமுக: அமைச்சர் பொன்முடி கிண்டல்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.