ETV Bharat / state

சென்னையில் கரோனாவுக்கு இரண்டாவது காவலர் உயிரிழப்பு

author img

By

Published : Jul 1, 2020, 11:28 AM IST

சென்னை: கரோனா பாதிப்புக்கு பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன் மரணம் அடைந்துள்ளார். ஆக, இதுவரை இரண்டு காவலர்கள் கரோனா நோய் தொற்றால் சென்னையில் உயிரிழந்துள்ளனர்.

Special Sub inspector died for COVID-19
கரோனாவுக்கு பலியான சிறப்பு உதவி ஆய்வாளர் மணிமாறன்

சென்னை பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த 57 வயதான சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் மணிமாறன் என்பவருக்கு கரோனா தொற்று கடந்த ஜூன் 10ஆம் தேதி உறுதி செய்யப்பட்டது.

இதனைத்தொடர்ந்து அவர் கடந்த 11ஆம் தேதி குரோம்பேட்டை தனியார் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு கரோனா சிகிச்சை பெற்று வந்தார்.

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று (ஜூலை 1) அதிகாலை 2 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

முன்னதாக, சென்னை காவல் துறையில் பணியாற்றிய ஆய்வாளர் பாலமுரளி, கரோனா காரணமாக இறந்த நிலையில், காவல் துறையில் இரண்டாவது உயிரிழப்பாக சிறப்பு உதவி ஆய்வாளர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.

இதையும் படிங்க: சென்னையில் 537 இடங்களில் நடைபெற்ற கரோனா கண்டறிதல் மருத்துவ முகாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.