சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர் ரத்னமங்கலம் தாகூர் பல் மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக ஒன்றரை வருடத்திற்கு மேலாக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், 'நான் தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக தங்கியிருந்து பணிபுரிந்து வருகிறேன். இங்குள்ள சீனியர் பணியாளர்கள் சிலர் என்னை தகாத வார்த்தைகளால் பேசிகின்றனர். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை துன்புறுத்தியுள்ளனர்.
சில சமயங்களில் என்னை அறைக்குள் வைத்து பூட்டிவிடவும் செய்வார்கள். கடந்த இரண்டு வாரங்களாக எனக்கு உணவும், தண்ணீரும் தரவில்லை. இதனால் உடலளவில் நான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளேன். என்னை எப்படியாவது காப்பாற்றுங்கள்” என பேசியுள்ளார்.
ஆனால் எதற்காக அப்பெண்னை துன்புறுத்துகிறார்கள் என்பதை அந்த பெண் கூறவில்லை. இது குறித்து கல்லூரி நிர்வாகம் சார்பில் கூறுகையில், 'இது தொடர்பாக விசாரணை கமிட்டியை அமைத்துள்ளோம். கமிட்டியில் உள்ளவர்கள் புகார் அளித்த பெண்ணுடன் விசாரித்து வருகின்றனர். புகாரில் உண்மை இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.