ETV Bharat / state

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்! - காவிரி மேலாண்மை வாரியம்

மேகேதாட்டு அணை கட்டுவதைத் தடுத்து நிறுத்துவது குறித்து தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேகேதாட்டு அணை விவகாரம்
மேகேதாட்டு அணை விவகாரம்
author img

By

Published : Jul 1, 2021, 3:55 PM IST

சென்னை: தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன், பூவுலகின் நண்பர்கள் ஜி. சுந்தரராஜன், நீரியல் வல்லூநர் ஜனகராஜன் உள்ளிட்டோர் இன்று ( ஜூலை 01) சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

முன்னதாக காவிரி மேலாண்மை ஆணையம் குறித்த பிரசுரம் ஒன்றை பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன் வெளியிட்டார்.

அப்போது பேசிய அவர் கூறியதாவது, "காவிரி மேலாண்மை வாரியத்திற்கு நிரந்தர தலைவரை இந்த அரசு நியமிக்கவில்லை. அந்த ஆணையம் தன்னாட்சி அதிகாரத்தோடு இன்னும் செயல்பட முன் வரவில்லை. ஒன்றிய அரசு அதனை செயல்பட விடவும் இல்லை.

மேகேதாட்டு அணை விவகாரம்: தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும்

இந்த ஆணையத்தினால் பயன்பெற போவது தமிழ்நாடு தான். அதனால் தான் ஆணையத்தின் செயல்பாட்டை முடக்கிவிட வேண்டுமென ஒன்றிய அரசு மறைமுகமாக செயல்படுகிறது" எனக் குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து, "ஆணையத்திற்கு தலைவர் நியமிக்காத கரணத்தினால், இரண்டு வருடங்களாக கூட்டம் நடைபெறவில்லை. ஆணையத்தினை செயல்பட வைக்க முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி மக்கள் மத்தியில் இந்தப் பிரசுரங்களை கொண்டு சேர்க்க இருக்கிறோம். இந்த விவகாரத்தில் ஒருமித்த கருத்து உருவாக அனைத்து கட்சி கூடத்தினை தமிழ்நாடு அரசு கூட்ட வேண்டும். இது தொடர்பாக அனைத்து கட்சி தலைவர்களையும் சந்திக்க இருக்கிறோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பழங்குடியினருக்கு 100% தடுப்பூசி சாத்தியமானது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.