ETV Bharat / state

கிடுகிடுவென உயர்ந்த விமான டிக்கெட்.. குறையாத விமான பயணிகள் கூட்டம் - Chennai on the occasion of Diwali

பலரும் தீபாவளியைக் கொண்டாடுவதற்காக, விமானங்களில் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்வதால் சென்னை விமானநிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்த நிலையில், விமான டிக்கெட்களின் விலையும் பன்மடங்கு அதிகரித்துள்ளன.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 22, 2022, 12:57 PM IST

Updated : Oct 22, 2022, 1:25 PM IST

நாடெங்கும் தீபாவளி பண்டிகை விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு வார விடுமுறை என தொடர்ச்சியாக வருவதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் வசிக்கும் வெளியூர் மக்கள் ஒட்டுமொத்தமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு தீபாவளியை கொண்டாடுவதற்காக செல்கின்றனர். இதனால் பேருந்து நிலையம், ரயில் நிலையம் ஆகியவைகளில் பயணிகள் கூட்டம் நிரம்பியுள்ளன.

இதையடுத்து சிறப்பு பேருந்துக்கள், சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. ஆனாலும் பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளது. இறுதி நேரத்தில் பயணிகள் பலா் விமானங்களில் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் ஒட்டுமொத்தமாக சென்னை விமான நிலையத்தை நோக்கி படையெடுப்பதால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் நிறைந்து வழிகிறது.

முன்னதாக, பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள், சிறப்பு ரயில்கள் விடப்பட்ட நிலையிலும் இறுதி நேரத்தில் ஏராளமான பயணிகள் கூட்டம் கூட்டமாகக் கிளம்பி செல்கின்றனர். இதன் ஒருபகுதியாக, சென்னை விமானநிலையத்திலும் பயணிகள் கூட்டம் குறைந்த பாடில்லை. சென்னை விமான நிலையத்தில் வழக்கமாக, ஒரு நாளைக்கு 35 ஆயிரத்திலிருந்து 40 ஆயிரம் வரை பயணிகள் பயணித்துக் கொண்டு இருந்த நிலையில் தற்போது, 50 ஆயிரத்தையும் கடந்து வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் அதிகமாகும் பயணிகள் கூட்டத்தையொட்டி, விமானங்களின் பயண கட்டணமும் பல மடங்கு உயர்ந்துள்ளது. தீபாவளி இந்தியா முழுவதும் கொண்டாடப்படுவதால் சென்னையில் உள்ள வடமாநிலத்தவா்கள் பெருமளவு விமானங்களில் செல்வதால் வட மாநிலங்களுக்கு செல்லும் விமான கட்டணங்கள் மூன்று மடங்கு வரை உயர்ந்துள்ளன.

  • சென்னை-டெல்லி இடையே வழக்கமான கட்டணம் ரூ 6,000. தற்போது ரூ.12,000, ரூ18,000.
  • சென்னை கொல்கத்தா வழக்கமான கட்டணம் ரூ. 6,500. தற்போது ரூ.15,000-ரூ.17,000.
  • சென்னை புவனேஸ்வர் வழக்கமான கட்டணம் ரூ.6,000. தற்போது ரூ.11,000- ரூ.13,000.
  • சென்னை-கொச்சி வழக்கமான கட்டணம் ரூ. 3,500. தற்போது ரூ.9,000.
  • சென்னை திருவனந்தபுரம் வழக்கமான கட்டணம் ரூ. 5,000. தற்போது ரூ. 12,000,-21,000.

இதைப்போல் தமிழ்நாட்டுக்குள் இயக்கப்படும் விமானங்களான:

  • சென்னை-மதுரை இடையே வழக்கமான கட்டணம் ரூ.4,200. தற்போது ரூ.12,000.
  • சென்னை-திருச்சி வழக்கமாக ரூ.3,500. ஆனால், தற்போது ரூ.11,500.
  • சென்னை-தூத்துக்குடி வழக்கமாக ரூ.4,500. தற்போது ரூ.9,500, ரூ.11,500.
  • சென்னை-கோவை வழக்கமான கட்டணம் ரூ. 3,500. தற்போது ரூ.11,500 ஆகும்.

இவ்வாறு விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்தாலும் பயணிகள் தங்களுடைய சொந்த ஊரில் தீபாவளி கொண்டாடும் ஆர்வத்தில் கட்டணம் குறித்து யோசிக்காமல் ஆர்வமுடன் டிக்கெட்களை எடுத்து விமானங்களில் பயணிக்கின்றனர். இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, இதைப்போல் முக்கியமான திருவிழாக்களின்போது பயணிகள் கூட்டம் பல மடங்கு அதிகரிக்கும் காரணத்தால் குறைந்த கட்டண டிக்கெட்கள் அனைத்தும் காலியாகி விடுவதால் அதிக கட்டணம் டிக்கெட்கள் மட்டுமே இருக்கின்றன.

எனவே, வேறு வழியின்றி பயணிகளுக்கு அதிக கட்டண டிக்கெட் தான் இருக்கிறது என்று கூறுகிறோம். பயணிகள் கட்டணம் பற்றி பொருட்படுத்தாமல் பயணிக்கின்றனா். இதைப்போல், அதிக கட்டணம் கொடுப்பதைத் தவிா்க்க பயணிகள் முன்னதாகவே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து இருந்தால் தற்போது குறைந்த கட்டணத்தில் பயணிக்கலாம் என்று கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பேருந்துகளில் கட்டணம் கூடுதல் வசூலித்தால் நடவடிக்கை - அமைச்சர் சிவசங்கர் எச்சரிக்கை

Last Updated : Oct 22, 2022, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.