ETV Bharat / state

புயல் எதிரொலி: சென்னையில் 7 விமானங்கள் சேவை ரத்து... எந்தெந்த விமானம் தெரியுமா?

புயல் அச்சுறுத்தல் காரணமாகவும், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவா உள்ளதாலும் நேற்று ஒரே நாளில், 3 புறப்பாடு விமானங்கள் மற்றும் 4 வருகை விமானங்கள் என மொத்தம் 7 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டன.

Heavy Rain in Chennai Flights cancelled
சென்னையில் விமானங்கள் சேவை ரத்து
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 3, 2023, 8:51 AM IST

சென்னை: தமிழ்நாட்டில் பருவமழை வேகமெடுத்து பெய்து வருவதாலும், வங்க கடலில் உருவாகியுள்ள புயல் அச்சுறுத்தல் காரணமாகவும், சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் போதிய பயணிகள் இல்லாமல், டெல்லி, பெங்களூர், கவுகாத்தி, விஜயவாடா உள்ளிட்ட 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதோடு 16 புறப்பாடு விமானங்கள், 12 வருகை விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள், ஒரு மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

அதாவது சென்னை விமான நிலையத்தில் நேற்று பயணிகள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்ததால், இன்று மாலை 6.10 மணிக்கு கவுகாத்தி செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இரவு 7.15 மணிக்கு பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இரவு 9.10 மணிக்கு டெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் ஆகிய 3 புறப்பாடு விமானங்கள் ரத்து.

அதேபோல, மாலை 5.35 மணிக்கு பெங்களூரில் இருந்து சென்னை வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், மாலை 6.25 மணிக்கு பெங்களூரில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ், இரவு 8.20 மணிக்கு டெல்லியில் இருந்து வரும் விஸ்தாரா ஏர்லைன்ஸ், இரவு 10.20 மணிக்கு விஜயவாடாவில் இருந்து வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் ஆகிய 4 வருகை விமானங்கள் என மொத்தம் 7 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன.

அதோடு பக்ரைன், துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், தோகா ஆகிய சர்வதேச விமானங்கள், மும்பை அந்தமான் ஐதராபாத், டெல்லி, பெங்களூரு, கோவா, கொல்கத்தா உள்ளிட்ட 16 புறப்பாடு விமானங்கள் மற்றும் 12 வருகை விமானங்கள் என மொத்தம் 28 விமானங்கள், நேற்று 1 மணி நேரத்தில் இருந்து 4 மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

இந்த விமானங்கள் தாமதங்களுக்கு காரணம், எதிர் முனையில் வரவேண்டிய விமானங்கள் தாமதமாக வருவதால், இங்கிருந்து புறப்படும் விமானங்களும் தாமதமாக இயக்கப்பட்டன என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Ind Vs Aus : ஆறுதல் வெற்றி பெறுமா ஆஸ்திரேலியா? 4வது டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுடன் மோதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.