ETV Bharat / state

சென்னையில் நிலவும் மூடுபனியால் விமான சேவை பாதிப்பு! - Chennai weather today

சென்னை விமான நிலையப் பகுதியில் கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூரு, கோவைக்கு திரும்பிவிடப்பட்டன.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்
author img

By

Published : Dec 28, 2022, 10:02 AM IST

சென்னை: சென்னை விமான நிலையப் பகுதியில் இன்று காலை ஏழு மணிக்கு மேல் திடீரென மூடுபனி ஏற்பட்டது. இதை அடுத்து சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் ஓரளவு பாதிக்கப்பட்டன. பெங்களூருவில் இருந்து 84 பயணிகளுடன் இன்று காலை 6:45 மணிக்கு சென்னை வந்த தனியார் பயணிகள் விமானம், சென்னையில் தரை இறங்க முடியாமல் நீண்ட நேரமாக வானில் வட்டமடித்தது. அதன் பின்பு அந்த விமானம் புறப்பட்டு வந்த பெங்களூருக்கே மீண்டும், திருப்பிவிடப்பட்டது.

கத்தார் நாட்டு தலைநகர் தோஹாவிலிருந்து 248 பயணிகளுடன் சென்னைக்கு இன்று காலை 7 மணிக்கு வந்துக் கொண்டு இருந்த கத்தார் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரை இறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. அதைப்போல் கோவையில் இருந்து 92 பயணிகளுடன் இன்று காலை ஏழு முப்பது மணிக்கு சென்னை வந்த இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் தரையிறங்க முடியாமல் மீண்டும் கோவைக்கே திரும்பி சென்றது.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

அதோடு மும்பை, கொல்கத்தா, பெங்களூரு ஆகிய விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல் வானில் தொடர்ந்து வட்டமடித்துக் கொண்டு இருந்தன. அதைப்போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய பெங்களூரு, ராஜமுந்திரி, கொல்கத்தா, டெல்லி ஆகிய விமானங்களும் தாமதமாக புறப்பட்டு செல்கின்றன.

விமான சேவை பாதிப்பு
விமான சேவை பாதிப்பு

பனிமூட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருக்கிறது. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவே இந்த விமானங்கள் திருப்பி அனுப்பப்பட்டன. இன்னும் சிறிது நேரத்தில் வானிலை சீரடைந்து விடும் அதன் பின்பு வழக்கம்போல் விமான சேவைகள் நடக்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகின்றனர்.

இதையும் படிங்க: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.