ETV Bharat / state

மிக்ஜாம் புயல் எதிரொலி; சென்னை விமான நிலையத்தில் 22 விமான சேவைகள் ரத்து! - chennai airport news

Chennai airport: சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை குறைவாக உள்ளதால் இன்று ஒரே நாளில், 11 புறப்பாடு விமானங்கள் மற்றும் 11 வருகை விமானங்கள் என மொத்தம் 22 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னை விமான நிலையத்தில் 22 விமான சேவைகள் ரத்து
சென்னை விமான நிலையம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 6, 2023, 1:27 PM IST

சென்னை: சென்னை விமான நிலையத்தில் விமானிகள் மற்றும் பயணிகளின் வருகை குறைவாக உள்ளதால், இன்று (டிச.06) சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள் மற்றும் 11 வருகை விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, 10க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் மிக்‌ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் விமான நிலையங்கள் மழை நீரால் சூழ்ந்து பாதிக்கப்பட்டன. கடந்த இரண்டு நாட்களில் மழையின் அளவு குறைந்தது. இதனால் இன்று வழக்கமான விமான சேவைகள் தொடங்கிய நிலையில், விமான நிலையத்தில் போதிய விமானிகள் மற்றும் பயணிகள் வராததால் சென்னையிலிருந்து புறப்பட வேண்டிய 11 விமானங்கள் மற்றும் சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்கள் என மொத்தம் 22 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

சென்னையில் இருந்து இன்று காலை 3 மணிக்கு இலங்கை செல்லும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 6.30 மணிக்கு விஜயவாடா செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 6.45 மணிக்கு விசாகப்பட்டினம் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம், காலை 8 மணிக்கு டெல்லி, 8.10 மணிக்கு கொச்சி, 8.45 மணிக்கு பெங்களூர், 9.05 மணிக்கு திருவனந்தபுரம், 9.45 மணிக்கு புனே, 10.10 மணிக்கு கோவை மற்றும் பகல் 1.15 மணிக்கு சூரத், 1.25 மணிக்கு வாரணாசி ஆகிய 11 புறப்பாடு விமானங்கள் மற்றும் சென்னைக்கு வர வேண்டிய 11 விமானங்கள் என மொத்தம் 22 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேபோல், சென்னையிலிருந்து அந்தமான், டெல்லி, தூத்துக்குடி, அகமதாபாத் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய சுமார் பத்து விமானங்கள் இரண்டு மணி நேரம் வரை தாமதமாக இயக்கப்படுகின்றன.

இது குறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், “சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்க வேண்டிய விமானிகள், பொறியாளர்கள் உள்ளிட்ட விமான ஊழியர்கள் சிலர் வராததாலும், பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பதினாலும் இன்று சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனால், மாலையில் வழக்கமான சேவைகள், குறித்த நேரத்தில் இயக்கப்படும்” என்று தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மிக்ஜாம் புயல் மீட்புப்பணி; ஹெலிகாப்டர் மூலம் உணவு.. பெட்ரோல் பங்க், ஏடிஎம் மையங்களில் அலைமோதும் மக்கள் கூட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.