சென்னையிலிருந்து மேற்குவங்க மாநிலம் சிலிகுரிக்கு இன்று காலை 9.10 மணிக்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அந்த விமானத்தில் 122 பயணிகள் பயணிக்க இருந்தனா். அவர்கள் அனைவரும் காலை 8 மணிக்கு முன்னதாகவே சென்னை உள்நாட்டு விமானநிலையம் வந்துவிட்டனா்.
அவா்கள் அனைவரும் பாதுகாப்பு சோதனைகளை முடிந்து விமானத்தில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின் விமானம் புறப்படுவதற்கு தயாரான நேரத்தில், சிகுரியில் மோசமான வானிலை நிலவுவதாக விமானிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து விமானி சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தாா். இதனால் விமானம் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து கீழே இறக்கப்பட்டு ஓய்வு கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பயணிகளை கொல்கத்தா விமானங்கள் மூலம் சிலிகுரிக்கு செல்ல ஏற்பாடுகளை சென்னை விமான நிலைய அலுவலர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ‘எங்களுக்குள்ளும் சாதி இருக்கிறது’ - விஜய பிரபாகரன்!