ETV Bharat / state

விமானங்களில் இனி தமிழ் மொழியில் அறிவிப்பு: அமைச்சர் பாண்டியராஜன் - airport minister hardeep singh puri

தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களிலும், தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் தமிழ்நாட்டுக்கு வரும் விமானங்கள் ஆகியவற்றில் இனி தமிழில் முதலில் அறிவிப்புகள் வெளியாகும் என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

flight-announcement-in-tamil-pandiarajan-k

author img

By

Published : Nov 6, 2020, 8:05 PM IST

தமிழ்நாடு பண்பாட்டு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரியை சந்தித்தார்.

அந்த சந்திப்பின்போது, தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்களிலும், தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் தமிழ்நாட்டுக்கு வரும் விமானங்கள் ஆகியவற்றில் இனி தமிழில் முதலில் அறிவிப்புகள் வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, ''விமான போக்குவரத்து அமைச்சகம் சார்பாக ஏற்கெனவே அனைத்து விமான நிறுவனங்களுக்கும் விமான அறிவுப்புகளை முடிந்தவரை தமிழில் வழங்குமாறு ஆலோசனையை வெளியிட்டுள்ளோம். இனி விரைவில் அது செயல்முறை படுத்தப்படும்'' என கூறியுள்ளார்.

அதனால் இனி தமிழ்நாட்டுக்கு வரும் விமானங்கள், தமிழ்நாட்டிலிருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் தமிழ்நாடு விமான நிலையங்கள் ஆகியவற்றில் தமிழ் மொழியில் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: அமெரிக்க ஊடகங்களின் செயல் ‘இந்திய ஊடங்களுக்கான பாடம்’ - சசி தரூர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.