ETV Bharat / state

போலீசுக்கே ஷாக் கொடுத்த பலே கொள்ளை சம்பவம்.. சென்னையில் நடந்தது என்ன?

சென்னையில் நீண்ட நாள் நோட்டமிட்டு நகை வியாபாரியிடம் தங்கம் மற்றும் பணம் வழிப்பறி செய்த 5 பேர் கைது. மேலும் கொள்ளை போனதாக கூறப்படும் நகையை விட பறிமுதல் செய்யப்பட்டவை அதிகமாக இருந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நகை வியாபாரியிடம் வழிப்பறி
நகை வியாபாரியிடம் வழிப்பறி
author img

By

Published : Mar 17, 2023, 12:10 PM IST

சென்னை: கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் ஜெயின்(30). இவர் சென்னை சவுகார்பேட்டையில் தங்க நகை மொத்தம் வியாபாரம் செய்து வருகிறார்.நேற்று முன் தினம் (மார்ச்.15) காலை ராஜேஷ் செய்யாறு பகுதியில் நகைகளை விற்பனை செய்ய 1.20 கிலோ தங்க நகைகளுடன் இருசக்கர வாகனத்தில் கோயம்பேடு பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து பேருந்தில் செய்யாறு சென்று சுமார் 700 கிராம் நகைகளை விற்பனை செய்து விட்டு, அதற்கான தொகை ரூ.6.25 லட்சத்தைப் பெற்று கொண்டு பாக்கி 430 கிராம் தங்க நகைகளுடன் பேருந்தில் புறப்பட்டு நேற்று முன் தினம் இரவு சுமார் 9 மணியளவில் கோயம்பேடு நிலையம் வந்தடைந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ராஜேஷ் பணம் மற்றும் நகைகளை இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு கோயம்பேட்டில் இருந்து வீட்டிற்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

பூந்தமல்லி நெடுஞ்சாலை திருவீதியம்மன் கோயில் தெரு அருகே சென்றபோதுமற்றொரு இருசக்கர வாகனத்தில் எதிரே வந்த அடையாளம் தெரியாத 2 பேர் ராஜேஷின் இருசக்கர வாகனம் மீது மோதி கீழே தள்ளி விட்டுள்ளனர். அதன் பின் கீழே விழுந்த அவர் எழுந்து பார்த்த போது அந்த மர்ம நபர்கள் கத்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கத்தி முனையில் அவரிடம் இருந்த 430 கிராம் தங்க நகை, 6.25 லட்சம் பணம் ஆகியவற்றை பறித்து கொண்டு அந்த நபர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பி சென்றுள்ளனர்.

பாதிக்கப்பட்ட ராஜேஷ் இந்த சம்பவம் குறித்து அருகில் இருந்த அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை தீவிரமாகத் தேடி வந்தனர். அந்த தேடலின் முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் ராஜேஷ்ஜெயின் தன்னை தொடர்ந்து ஒருவர் வந்ததாக போலீசாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.

இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளை முழுமையாக ஆய்வு மேற்கொண்டதில் வழிப்பறி கொள்ளையன் ஒருவன், ராஜேஷ் வரக்கூடிய பேருந்தை தொடர்ச்சியாக பின் தொடர்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து நடத்திய தொடர் விசாரணையில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது. மொத்தம் காஞ்சிபுரம் பகுதியை காலேஷா, அக்கிம் அமீது, ஆரீப் முஸ்தாகீம், ரஞ்சித் மற்றும் ஒரு சிறுவன் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பின்னர் அவர்களை விசாரணை செய்ததில் பல உண்மைகள் வெளிவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட 5 நபரும் காஞ்சிபுரத்தில் ராஜேஷ்ஜெயினுக்கு தொடர்புடைய நகைக்கடைக்கு அருகில் உள்ள நகை கடையின் உரிமையாளர் உறவினர் பரத் என்பவரின் பள்ளி கால நண்பர்கள் என தெரியவந்துள்ளது. மேலும் விசாரணையில் ராஜேஷ்ஜெயின் நகைகளை விற்பனை செய்து கொண்டு செல்வதை அடிக்கடி நோட்டமிட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ராஜேஷ்ஜெயின் கணக்கில் வராமல் நகைகளை எடுத்துக் கொண்டு வருவதை அறிந்த அந்த கும்பல் கொள்ளையடிக்க திட்டமிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

அதனடிப்படையில், பின் தொடர்ந்து இந்த வழிப்பறி கொள்ளை சம்பவத்தை நிகழ்த்தியதும் தெரிய வந்துள்ளது. இவ்வாறு கொள்ளையடித்த பணத்தை வைத்து உடனடியாக பணக்காரன் ஆகிவிடலாம் என்ற பேராசையில், இந்த கொள்ளை கும்பல் கைவரிசை காட்டியது தெரியவந்துள்ளது. மேலும் கொள்ளையர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட நகையின் அளவானது, ராஜேஷ்ஜெயின் புகாரில் தெரிவித்த நகையின் அளவைவிட மிகவும் அதிகமாக இருந்ததை கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பறிபோன தொகையில் 4 லட்சத்து 10 ஆயிரம் பணத்தை போலீசார் மீட்டுள்ளனர். 430 கிராம் தங்க நகை மற்றும் 6.5 லட்சம் பணம் கொள்ளை போனதாக ராஜேஷ் ஜெயின் புகார் அளித்த நிலையில், 1677 கிராம் தங்க நகை வைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் முக்கிய குற்றவாளியான பரத் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புகாரில் தங்க நகை அளவை குறைத்துக் காட்டியதன் காரணம் என்ன என்பது குறித்து புகார்தாரர் ராஜேஷ்ஜெயினிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பணத்தை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும், அதற்குரிய ஆவணங்கள் ராஜேஷ்ஜெயின் சமர்ப்பித்ததால் மட்டுமே நீதிமன்றத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புகாரளித்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்கள் 5 பேரையும் உதவி ஆணையர் தலைமையிலான தனிப்படை போலீசார் கைது செய்து கொள்ளைப் போன முழு நகைகள் மற்றும் பணம் மீட்கப்பட்டுள்ளது என வடக்கு கூடுதல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். ராஜேஷ்ஜெயின் அலட்சியமாக உரிய ஆவணங்கள் இன்றி நகைகளை எடுத்து வந்ததால், அதை கொள்ளையடிக்கும் போது புகார் அளிக்க மாட்டார் என்ற எண்ணத்தில் கொள்ளை கும்பல் கொள்ளை அடித்திருக்கலாம் என கூடுதல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் பெரிய அளவிலான நகை, பணத்தை கொண்டு செல்லும் போது கூடுதல் நபர்களுடன் செல்ல வேண்டும் எனவும் காரில் பயணிக்க வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். புகார் அளித்த 24 மணி நேரத்தில் கொள்ளையர்களை கண்டுபிடித்து கொள்ளை போன நகை பணத்தை மீட்ட உதவி ஆணையர் அருள் தலைமையிலான தனிப்படையை சேர்ந்த 21 காவலர்களுக்கு, சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டு சான்றிதழ்களையும், வெகுமதியும் வழங்கியுள்ளார். அதனை வடக்கு கூடுதல் ஆணையர் தனிப்படை போலீசாருக்கு வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "விரைவில் சசிகலாவுடன் சந்திப்பு" - ஈபிஎஸ் தரப்புக்கு ஷாக் கொடுத்த ஓபிஎஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.