சென்னை விமான நிலையத்திற்கு பெருமளவில் கடத்தல் பொருள்கள் கொண்டுவரப்படுவதாக விமான நிலைய சுங்கத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதனைத்தொடர்ந்து சுங்க இலாகா அலுவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து துபாயிலிருந்து வந்த சரக்கு விமானத்தை சோதனையிட்ட சுங்கத்துறை அலுவலர்கள், பிரிண்டிங் பிரஸ்களில் மை தயாரிக்க உபயோகப்படுத்தும், மைப்பவுடரை ஆய்வு செய்த சுங்கத் துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அந்த மை பவுடர்களை சோதனையிட்ட சுங்கத் துறையினர், அதில் தங்கப்பவுடர் கலக்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினர். இதையடுத்து அனைத்து பாா்சல்களையும் உடைத்து மை பவுடர்களை தண்ணீரில் கரைத்து வடிகட்டி தங்கப்பவுடரை தனியே எடுக்கும் பணி நடக்கிறது.
சுங்கத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட சோதனையில் சுமார் ரூ.5 கோடி மதிப்புள்ள தங்கப்பவுடர் சிக்கியுள்ளதாகவும், அதனை மை பவுடரில் கலந்து கொரியரில் அனுப்பிய நபரைப் பற்றி விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: வேலூரில் ஒரு டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் - ஏழு பேரை தேடும் பணி தீவிரம்