சென்னை: பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் (GST Road) உள்ள தனியார் உணவகம் ஒன்றில் பெண்களைத் தங்கவைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக பல்லாவரம் காவல் துறையினருக்கு (Pallavaram police) ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து பல்லாவரம் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் தலைமையில் காவல் துறையினர் உணவகத்தில் அதிரடி சோதனை செய்தனர். இது குறித்து உணவக மேலாளர் சந்தோஷ்குமாரிடம் (39) விசாரணை செய்தபோது, பெண்களை வைத்து பாலியல் தொழிலில் ஈடுபட்டுவந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக உணவக மேலாளர் (Hotel manager) சந்தோஷ்குமார், கடலூரைச் சேர்ந்த தரகர் சரத்குமார் (25), மண்ணிவாக்கத்தைச் சேர்ந்த சக்திவேல் (33), திருமலை (35), குமாரவேல் (32) ஆகியோரை கைதுசெய்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தி சிறையில் அடைத்தனர்.
பாலியல் தொழிலில் ஈடுபட்ட நான்கு பெண்களை, மயிலாப்பூரில் உள்ள அரசு காப்பகத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: மயான பணியாளர்கள் முன்களப் பணியாளர்களாக அறிவிப்பு - அரசாணை வெளியீடு