ETV Bharat / state

தேசிய கடல் மீன்வள மசோதா: அமைச்சர் எல். முருகன் மீனவர்களை அழைத்துப் பேச வலியுறுத்தல் - Marine Fisheries Draft Bill

தேசிய மீன்வளச் சட்டத்திருத்த வரைவு மசோதா குறித்து மீனவர்களை அழைத்து ஒன்றிய இணை அமைச்சர் எல். முருகன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என மீனவர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

protest against Centre's Marine Fisheries Draft Bill
தேசிய கடல் மீன்வள மசோதா
author img

By

Published : Jul 19, 2021, 4:56 PM IST

சென்னை: தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்புச் சார்பில், ஒன்றிய அரசு கொண்டுவரவுள்ள தேசிய கடல் மீன்வள மசோதாவைக் கண்டித்து சென்னை காசிமேடு துறைமுகத்தில் இன்று (ஜூலை 19) கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தில் பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த மீனவர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த தமிழ்நாடு புதுச்சேரி மீனவர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் கோ.சு. மணி, "மீனவ மக்களுக்காக ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மசோதா ஒரு கறுப்புச் சட்டம். இது தனியார் முதலாளிகளுக்கு ஆதரவாகவும், மீனவ மக்களுக்கு எதிராகவும் உள்ளது.

இணை அமைச்சர் எல். முருகனுக்கு கோரிக்கை

தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்கள் இரண்டு நாள்களாகக் கறுப்புக்கொடி ஏந்திப் போராட்டத்தை நடத்திவருகிறோம். இந்த மசோதா குறித்து ஒன்றிய இணை அமைச்சராக உள்ள எல். முருகன் தமிழ்நாடு முழுவதும் உள்ள மீனவர்களை அழைத்துப் பேச வேண்டும்" என்றார்.

கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்
கருப்புக் கொடி ஏந்தி போராட்டம்

இந்த மசோதாவிற்கு எதிராக காசிமேடு துறைமுகத்தில் உள்ள அனைத்துhd படகுகளிலும் கறுப்புக் கொடி பறக்கவிடப்பட்டது. இதில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மீனவச் சங்கங்களும் கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

கோ.சு. மணி பேட்டி

இதையும் படிங்க: புதிய மீன்வள வரைவு மசோதா: கருத்துக்கேட்பு கூட்டத்தைவிட்டு வெளிநடப்பு செய்த மீனவர்கள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.