ETV Bharat / state

ஈரானில் இருந்து தமிழ்நாட்டு மீனவர்கள் மீட்பு - சென்னை செய்திகள்

ஈரானில் இருந்து ஆறு தமிழ்நாடு மீனவர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர்.

ஈரானில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஆறு மீனவர்கள்

author img

By

Published : Aug 22, 2021, 1:55 PM IST

தமிழ்நாட்டின் கடலூர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த ஆறு மீனவர்கள் ஈரான் நாட்டைச் சேர்ந்த யாஷின் என்பவரது விசைப்படகில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு மீன்பிடி வேலைக்கு சேர்ந்துள்ளனர்.

தொடர்ந்து, கடந்த இரண்டு மாதங்களாக படகில் போதிய மீன்கள் கிடைக்காததால் ஆத்திரமடைந்த படகின் உரிமையாளருக்கும் மீனவர்களுக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டு மீனவர்கள் உண்ண உணவும் தங்குவதற்கு இடமும் இன்றி கடும் பிரச்னைகளை சந்தித்து வந்துள்ளனர்.

தொடர்ந்து, சர்வதேச மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவரிடம் தங்களை மீண்டும் தமிழ்நாட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரி நாடியுள்ளனர்.

ஈரானில் இருந்து தமிழ்நாடு திரும்பிய ஆறு மீனவர்கள்

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசின் வெளிநாடு வாழ் தமிழர் நல ஆணையரகம், ஈரானில் உள்ள தூதரகத்தை தொடர்பு கொண்டு ஆறு தமிழ்நாட்டு மீனவர்களையும் தாயகம் அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டது.

அதனடிப்படையில் ஆறு தமிழ்நாட்டு மீனவர்களும் இன்று (ஆக.22) சென்னை விமான நிலையம் அழைத்து வரப்பட்டனர். தொடர்ந்து, அலுவலர்கள் அவர்களை வரவேற்று சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: 80 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கி வைப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.