கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் என்ற நபர் சென்னை காசிமேட்டில் மீன்களை ஏலம்விடும் இடத்தில் வேலை செய்துவந்தார். இவர் செல்வழகன் என்பவரது படகில், கடலிலிருந்து பிடித்துவரப்பட்ட மீன்களைப் படகிலிருந்து கீழே இறக்கும்போது திடீரென மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
அருகில் இருந்தவர்கள் அவரை உடனே ஆம்புலன்ஸ் மூலம் ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால் ஸ்ரீதர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து உயிரிழந்தவரின் உறவினருக்குத் தகவல் தெரிவித்த காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க... மீன்பிடிக்க சென்ற மீனவர் மாயம்! தேடும் பணி தீவிரம்...