ETV Bharat / state

தூத்துக்குடியில் மீனவர் கல்லால் அடித்துக் கொலை! - தூத்துக்குடியில் மீனவர் அடித்துக் கொலை

தூத்துக்குடியில் டீசல் திருட்டில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் மீனவர் கல்லால் அடித்துக் கொலை!

author img

By

Published : Jan 13, 2022, 3:56 PM IST

தூத்துக்குடி: தாளமுத்துநகர் சமீர்விகாஸ் நகரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (31). கடலில் மீன்பிடி தொழில் செய்து வந்தார். இவர் தனது ஓய்வு நேரங்களில் டீசல் திருடும் வேலையை செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி சிப்காட் காட்டுப்பகுதியில் நேற்றிரவு (ஜன.12) டீசல் திருடுவதற்காக அலெக்ஸ் கேன்களை எடுத்துக்கொண்டு நண்பர்களுடன் வந்துள்ளார். அப்போது ஒன்றாக மது அருந்தும்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் உடனிருந்தவர்கள் அலெக்ஸை கல்லால் தாக்கியுள்ளனர். இதில் அவர் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி வைத்தனர். ஏற்கனவே கொலை செய்யப்பட்ட அலெக்ஸ் மீது தாளமுத்துநகர் காவல் நிலையத்தில் பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இதுதவிர அவர் மீது பாலியல் தொடர்பான வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இக்கொலை வழக்கு குறித்து சிப்காட் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.