திருவொற்றியூர் பூங்காவனபுரத்தை சேர்ந்தவர் மீனவர் குப்பன் (46). இவருக்கும் ஒண்டிகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர்கள் மோகன்(36), ரகு (45) துரைராஜ் (56).
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும், குப்பனும் ஒண்டிகுப்பம் பெருமாள் கோவில் அருகே வீடு கட்டுவதில் தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 17ஆம் தேதி இருதரப்பினரும் சரமாரியாக தாக்கி கொண்டனர்.
இதில் காயமடைந்த குப்பன் அரசு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மோகன், ரகு ஆகிய இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த துரைராஜ் நேற்றிரவு (ஜூன். 24) கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: லாரி டிரைவரை சரமாரியாக தாக்கி செல்போன், பணம் பறிப்பு!