சென்னை: நீதிபதிகள் தங்களது அறையிலிருந்து நீதிமன்ற விசாரணை அறைக்கு வந்துசெல்லும்போது, நீதிபதிகள் எளிதாக கூட்டத்தை கடந்து செல்லும் வகையில் செங்கோல் தாங்கிய சோப்தார்கள் முன் செல்வர்.
வெள்ளை உடை அணிந்து, தேசிய சின்னம் பொறித்த சிகப்பு தலைப்பாகை, உடலின் குறிக்கே சிகப்பு பட்டை அணிந்து, செங்லோலை ஏந்தி, "உஷ்" என வழிவிடும்படி ஒலி கூறிக்கொண்டே நீதிபதிகளுக்கு முன் செல்வர். காலை முதல் மாலை வரை நீதிபதி இருக்கும் இடத்திலேயே இருப்பர்.
இந்தப் பணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வரலாற்றில் முதன்முறையாக பெண் ஒருவர் சோப்தாரராக
நியமிக்கப்பட்டுள்ளார். உதவியாளர் பணிக்கு தேர்வாகி பணியாற்றிவந்த அவரை தனக்கு சோப்தாராக நியமிக்கும்படி பெண் நீதிபதி ஒருவர் கேட்டு கொண்டதையடுத்து அவர் சோப்தாரராக நியமிக்கப்பட்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: போலி சான்றிதழ்: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்ற பெண் கைது