ETV Bharat / state

முதன்முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் குறித்து ஆன்லைன் கலந்தாய்வு - ஆன்லைன் கலந்தாய்வு

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பணி புரியும் சிறப்பு ஆசிரியர்களுக்கு பணியிடம் மாறுதல் கலந்தாய்வு முதல் முறையாக ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

முதன்முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணி இட மாறுதல் குறித்து ஆன்லைன் கலந்தாய்வு

author img

By

Published : Nov 24, 2022, 9:12 PM IST

சென்னை: அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஓவியம், இசை, தையல், உடற்கல்வி ஆகிய சிறப்பு ஆசிரியர்கள் பணியில் தற்காலிக அடிப்படையில் 12 ஆண்டுகளாக சுமார் 16 ஆயிரம் பேர் நியமனம் செய்யப்பட்டு தற்பொழுது 13000 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.

வாரத்தில் மூன்று அரை வேலை நாட்கள் பணிபுரியும் இவர்களுக்கு தொகுப்பூதியத்தில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. இவர்கள் பணியில் சேரும்போது எந்தப் பள்ளியில் பணிபுரிந்தார்களோ அதே பள்ளியில் தற்போது வரை பணிபுரிந்து வருகின்றனர். தங்களின் சொந்த ஊரிலிருந்து சுமார் 100 கிலோ மீட்டருக்கு மேல் சென்றும் பணி புரியும் அவல நிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் இருந்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னையில் ஜாக்டோ ஜியோ சார்பில் நடத்தப்பட்ட வாழ்வாதார மாநாட்டில் பங்கேற்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பகுதி நேர ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் பணியிடம் மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு மாறுதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

தமிழ்நாடு முதலமைச்சர் அறிவிப்பை செயல்படுத்தாமல் பள்ளி கல்வித்துறை இருந்த நிலையில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள் நாளை(நவ.25) போராட்டம் அறிவித்திருந்தனர்.

இந்நிலையில், கலந்தாய்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து, பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குனர் சுதன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசு செப்டம்பர் 10ஆம் தேதி வெளியிட்ட செய்தி குறிப்பில் பகுதி நேர பயிற்றுநர்களுக்கு விருப்பத்திற்கு ஏற்ப இணைய வழியில் ஒளிவு மறைவற்ற இடமாறுதல் கலந்தாய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 2022-23 ஆம் ஆண்டிற்கான பகுதிநேர பயிற்றுநர்களின் கலந்தாய்வில் முதல் கட்டமாக பகுதிநேர ஓவிய ஆசிரியர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து உடற்கல்வி மற்றும் தொழிற்கல்வி பயிற்சி நற்கும் தனித்தனியே கலந்தாய்வு நடத்தப்படும்.

முதலில் மாவட்டத்திற்குள்ளும் ,அதனைத் தொடர்ந்து மாவட்டம் விட்டு மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும். பணியிடமார்கள் பெரும் பகுதி நேர பயிற்றுநர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட உடன் புதிய பணியிடத்தில் சேர வேண்டும். விருப்பத்தின் அடிப்படையில் பணியிடம் ஆறுதல் பெறுவதால் அந்த ஆணையை ரத்து செய்யவும் அல்லது மாற்றம் செய்யவோ கோரும் கோரிக்கைகள் பரிசீலிக்க இயலாது.

மேலும், பகுதி நேர ஆசிரியர்கள் ஒரே பணியிடத்திற்கு இரண்டு பேர் கேட்டால் அவர்கள் பணியில் சேர்ந்து நாள் மற்றும் பிறந்தநாள் அடிப்படையில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும், கணவர் அல்லது மனைவியை இழந்தவர் முற்றிலும் கண்பார்வையற்றவர் மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை டயாலிசிஸ் சிகிச்சை இறுதி அறுவை சிகிச்சை புற்றுநோயாளிகள் மூளை கட்டி போன்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் பதில் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: காவல், நீதி துறைகள் மீது நம்பிக்கை உள்ளது - நடிகர் சூரி கருத்து!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.