ETV Bharat / state

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நாளை முதல் மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்! - கலை மற்றும் அறிவியல் கல்லூரி

தமிழ்நாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை(ஆக.5) நடைபெறவுள்ளது.

கலை மற்றும்  அறிவியியல் கல்லூரிகளில் சேர நாளை முதற்கட்டக் கலந்தாய்வு..!

author img

By

Published : Aug 4, 2022, 8:02 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பித்தவர்களில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு நாளை முதல் ( ஆகஸ்ட் 5ஆம் தேதி) கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப்பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஒற்றைச்சாளர முறையில், இட ஒதுக்கீட்டினைப் பின்பற்றி முதல்கட்ட கலந்தாய்வு நாளை(ஆக.5) முதல் மாணவர்களை நேரில் அழைத்து நடத்தப்படுகிறது.

163 கல்லூரிகளில் 1.30 லட்சம் இடங்களில் சேர்வதற்கு 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 பேர் கலந்துகொள்ள தகுதி பெற்றுள்ளனர். முதல் கட்ட கலந்தாய்வின் முதல் நாளில் சிறப்புப்பிரிவினருக்கும், அதனைத்தொடர்ந்து பிற பிரிவினருக்கும் பாட வாரியாக அழைக்கப்பட்டு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 163 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை பட்டப்படிப்பு முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கைக்கான (2022-23) விண்ணப்பங்களை http://www.tngasa.in/ அல்லது http://www.tngasa.org/ என்ற இணையதள முகவரிகளில் ஜூன் 22ஆம் தேதி முதல் ஜூலை 27ஆம் தேதி இரவு 12 மணி வரையிலும் 4 லட்சத்து 7 ஆயிரத்து 45 மாணவர்கள் விண்ணப்பம் செய்தனர்.

அவர்களில் 3 லட்சத்து 34 ஆயிரத்து 765 மாணவர்கள் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்தனர். அதில் 2 லட்சத்து 98 ஆயிரத்து 56 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தி இருந்தனர். மாணவர்கள் விருப்பம் தெரிவித்த கல்லூரிகளில் விண்ணப்பித்தவர்களில் 12ஆம் வகுப்பில் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயார் செய்யப்பட்டதையடுத்து தற்போது முதற்கட்ட கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: குறைந்த வாடகையில் வழங்கிடும் டிராக்டர்களை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.