ETV Bharat / state

சென்னை விமானநிலையத்தில் ஐந்து வயது குழந்தையிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்! - கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர்

சென்னை விமானநிலையத்தில் 5 வயது குழந்தை கைப்பையில் இருந்து துப்பாக்கி குண்டை பாதுகாப்பு அலுவலர்கள் பறிமுதல் செய்தனா்.

சென்னை விமானநிலையத்தில் ஐந்து வயது குழந்தையிடம் துப்பாக்கி குண்டு பறிமுதல்...

author img

By

Published : Aug 16, 2022, 7:00 PM IST

சென்னை: கர்நாடக மாநிலத்தைச்சேர்ந்தவர் கிருஷ்ணா துபே (64). இவர் ஒன்றிய அரசின் சென்ட்ரல் எக்சைஸ் பிரிவில் உயர் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். கிருஷ்ணா துபே, கடந்த சில தினங்களுக்கு முன் குடும்பத்தினா் 5 பேருடன் இஸ்ரேல் நாட்டிற்குச் சுற்றுலா சென்றனா். அதன்பின்பு சுற்றுலாவை முடித்துவிட்டு இஸ்ரேல் நாட்டிலிருந்து துபாய் வந்து, அங்கிருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் சென்னை வந்தனா்.

சென்னையிலிருந்து உள்நாட்டு விமானத்தில் பெங்களூரு செல்வதற்காக சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்குச் சென்றனர். அங்கு இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக சென்னை விமான நிலையப் பாதுகாப்பு அலுவலர்கள் அவர்களை சோதனை நடத்தினா். அப்போது கிருஷ்ணா துபேவின் 5 வயது பேத்தியின் கைப்பையில் இருந்து வெடிகுண்டு இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்தது.

இதையடுத்து அந்த அதிர்ச்சி அடைந்த பாதுகாப்பு அலுவலர்கள் உடனடியாக கிருஷ்ண துபேயின் குடும்பத்தினரை நிறுத்தி, அந்த ஐந்து வயது பெண் குழந்தை வைத்திருந்த கைப்பையினை தனியே எடுத்து வைத்து, பாதுகாப்பாக பிரித்து பார்த்தனா். அதனுள் வெடிக்காத ஒரு துப்பாக்கி குண்டு இருந்ததைக் கண்டுபிடித்தனா். இதையடுத்து பாதுகாப்பு அலுவலர்கள் அந்த குண்டைப் பறிமுதல் செய்தனா். அதோடு கிருஷ்ணா துபேயின் குடும்பத்தினா் பயணங்களை ரத்து செய்தனா்.

அதன்பின்பு மேல் நடவடிக்கைக்காக சென்னை விமானநிலைய போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனா். போலீசாா் விசாரணை நடத்தியபோது தாங்கள் இஸ்ரேல் நாட்டின் சுற்றுப்பயணம் செய்யும்போது அங்கு கடற்கரை மணலில் இந்த பொருள் கிடந்தது. அது துப்பாக்கி குண்டு என்று தெரியாமல் எடுத்து குழந்தைக்கு விளையாட கொடுத்திருந்தோம் என்று கூறினா்.

போலீசாா் குண்டை ஆய்வு செய்தபோது, அது வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டது என்றும், பெரிய துப்பாக்கிகளில் போட்டு வெடிக்கக்கூடிய "9 mm" ரகம் என்றும் தெரிந்தது. இதையடுத்து குண்டை போலீசாா் பறிமுதல் செய்தனா். அதோடு அவா்களை எச்சரித்து எழுதி, வாங்கிக்கொண்டு, பெங்களூருவுக்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் மீது வழக்குகள் எதுவும் பதியாமல் அனுப்பி வைத்ததால் அது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

ஆனால், தற்போது இந்த தகவல் வெளியாகி பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை விமான நிலையத்தில் சுதந்திர தினத்தில் பாதுகாப்பாக கடந்த சனி, ஞாயிறு, திங்களில் 7 அடுக்கு உச்சகட்ட பாதுகாப்பு இருந்த நிலையில் இதைப்போன்ற ஒரு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:பள்ளி நண்பர்களுடன் இணைந்து வங்கியில் 32 கிலோ தங்கம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.