ETV Bharat / state

வீட்டின் மேல் குடிசையில் தீ விபத்து: ஒரு லட்சம் ரூபாய் பொருள்கள் நாசம்

author img

By

Published : Mar 23, 2020, 4:50 PM IST

சென்னை: பல்லாவரம் அருகே வீட்டின் மேல் குடிசையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து சேதமடைந்தன.

fire accident
fire accident

சென்னை பல்லாவரம் அடுத்த ஜமின் ராயப்பேட்டை ஐஸ்வர்யா நகர் ஒன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (70). இவர் மகன், மருமகள் என தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் மகன் கார்த்திக் தன் மனைவி மற்றும் குழந்தையுடன் வீட்டு மாடியில் மேல் அமைக்கப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் வீட்டில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தபோது வீட்டு குடிசையில் இருந்து புகை வந்துள்ளது.

இதனால் வீட்டின் உள்ளிருந்து கார்த்திக் அவரது மனைவி, குழந்தையுடன் வெளியே ஓடி வந்துள்ளனர். பின்னர் திடீரென குடிசை எரிய ஆரம்பித்த நிலையில், அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்தார். இதனையடுத்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில் தாம்பரத்தில் இருந்து இரண்டு தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், ஒரு மணி நேரம் போராடி தீயை அனைத்தனர்.

வீட்டில் கொழுந்து விட்டு எரியும் தீ

இந்தத் தீ விபத்தில் குடிசை முற்றிலும் எரிந்து தீக்கிறையானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிட்லபாக்கம் காவல் துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் மின் கசிவு காரணமாக விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், வீட்டின் குடிசை எரிந்ததில் வீட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள உபயோக பொருள்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.

இதையும் படிங்க: மக்களுக்கு உதவ முன்வந்த டிஆர்டிஓ: கிருமி நாசினி குறைந்த விலையில் உற்பத்தி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.