சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை பகுதியில் தெற்கு டாஸ்மாக் அலுவலகம் இயங்கிவருகிறது. இந்த நிலையில் அலுவலகத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக டாஸ்மாக் குடோன் பாதுகாவலர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இந்தத் தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்தனர்.
இதில் டாஸ்மாக் கடைகளின் விவரங்கள், வரவு - செலவு விவரங்கள், டாஸ்மாக் பார்கள் குறித்த விவரங்கள் அடங்கிய முக்கிய ஆவணங்கள் தீயில் கருகின. மேலும் முக்கிய தகவல்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட கணினிகளும் தீயில் கருகி நாசமாகின. இதுகுறித்த புகாரின் அடிப்படையில் தீ விபத்து குறித்து அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் வ.உ.சி உள்ளிட்ட 3 தலைவர்களின் படத்தை திறந்துவைத்தார் முதலமைச்சர்!