ETV Bharat / state

தமிழ்நாடு இ- பட்ஜெட்: 'தீயணைப்புச் சேவை சட்டம் மாற்றியமைக்கப்படும்'

தற்போது நடைமுறையிலுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு இ- பட்ஜெட்
தமிழ்நாடு இ- பட்ஜெட்
author img

By

Published : Aug 13, 2021, 5:29 PM IST

சென்னை: புதிதாகப் பொறுப்பேற்றுள்ள முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு இன்று (ஆக.13) முதல் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது.

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன்முறையாக காகிதம் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். இதில் பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ரூ. 405.13 கோடி நிதி ஒதுக்கீடு

அந்த வகையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு நிதியமைச்சர் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். தீ விபத்துகள் மற்றும் தடுக்கத்தக்க மீட்புப்பணிகளில் பல்வேறு விபத்துகளால் பொருளாதார இழப்பு, உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.

இதனைத் தடுக்க தற்போதுள்ள 1985ஆம் ஆண்டு தீயணைப்புச் சேவைகள் சட்டம் முழுமையாக மாற்றியமைக்கப்படும்.

தமிழ்நாடு இ- பட்ஜெட்

மீட்புப் படையினர் குறைவான நேரத்திற்குள் சம்பவ இடத்திற்குச் செல்ல ஏதுவாக புதிய தீயணைப்பு நிலையங்கள் அறிவியல்பூர்வமாக வரைபடங்களின் உதவியுடன் தேர்வு செய்யப்படும்.

மாதிரி பயிற்சிக்கருவிகள், சுய பாதுகாப்புச் சீருடைகள் போதிய அளவில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு வழங்கப்படும். இத்துறைக்கு ரூ. 405.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் நிறைவு - கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.