ETV Bharat / state

பம்மலில் ஏசி பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து -  பொருள்கள் நாசம்

author img

By

Published : Mar 17, 2021, 2:01 PM IST

சென்னை: பம்மலில் இயங்கிவரும் ஏசி பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் நாசமாகின.

fire accident in air conditioner repair shop
ஏசி பழுது பார்க்கும் கடையில் தீ விபத்து

சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் அண்ணா நகர் பகுதியில் சூரிய பிரகாஷ் ராவ் என்பவர் ஏசி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மிஷின் பழுது பார்க்கும் கடை நடத்திவருகிறார்.

இவர் காலையில் கடையை திறந்துவைத்து வேலை செய்தபோது திடீரென கடையிலிருந்து புகை கிளம்பியது. இதனால் பயந்துபோன அவர் வெளியில் ஓடி வந்ததார். அப்போது தீ மளமளவென எரிய ஆரம்பித்தது.

இதையடுத்து தாம்பரம் தீயணைப்பு துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தாம்பரம் சானிடோரியத்திலுள்ள தீயணைப்பு வாகனத்தில் சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர், தீயை சுமார் 1 மணி நேரம் போராடி அனைத்தனர்.

இந்தத் தீ விபத்தில் கடையில் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. இதுகுறித்து சங்கர் நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரனை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: பர்னிச்சர் கடையில் தீ விபத்து: 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.