சென்னை: சென்னையில் உள்ள முக்கிய வணிக பகுதியான பாண்டி பஜாரில் 4 அடுக்கு கொண்ட ரெயின்போ ஆர்கடே ஏன்ற வணிக வளாகம் செயல்பட்டு வருகிறது.
இதில் முதல் தளத்தில் உள்ள துணிக் கடையில் மின் கசிவு காரணமாக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ படிப்படியாக அடுத்தடுத்த தளங்களுக்கும் பரவியது.
இந்நிலையில், மூன்றாவது தளத்தில் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்பட்டது. விரைந்து சென்ற தீயணைப்பு வீர்ர்கள் 5 வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டனர். மேலும் கட்டடத்தில் சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
திடீரென தீ விபத்து
அப்பகுதியில் புகை மண்டலம் சூழ்ந்ததால் 1 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு நிலவியது. இது குறித்து மத்திய சென்னை தீயணைப்பு துறை இணை இயக்குனர் ரவிச்சந்திரன் கூறுகையில், “மின்கசிவு காரணமாக துணிக் கடையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்ததும், 5 தீ அணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகளை மேற்கொண்டோம். கட்டடத்தின் படிகட்டுகள் வழியே உள்ளே சிக்கியிருந்தவர்கள் பத்திரமாக வீரர்கள் மீட்டனர். கட்டடத்தில் பரவிய தீயை முழுமையாக அணைத்து விட்டோம். இதில் யாருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை” என்றார்.
இதையும் படிங்க:திருச்சி அருகே திமுக வேட்பாளர் கருணாநிதி போட்டியின்றி தேர்வு