ETV Bharat / state

நள்ளிரவில் விசாரணை நடத்திய போலீசாருக்கு ரூ.1 லட்சம் அபராதம் - காவல்துறை அலுவலர்களுக்கு அபராதம்

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் கேட்டவரிடம் நள்ளிரவில் விசாரணை நடத்திய போலீசாருக்கு மனித உரிமை ஆணையம் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

நள்ளிரவில் விசாரணை நடத்திய காவல்துறை அலுவலர்களுக்கு ரூ.1லட்சம் அமராதம்..!

author img

By

Published : Jun 3, 2022, 9:11 AM IST

கோயம்புத்தூர்: திருமலையாம்பாளையம் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ரமேஷ்குமார் சட்டக் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார். இவர் 2019ஆம் ஆண்டு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ”நான் கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை பணிகளில் முறைகேடுகள் நடப்பது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கீழ் மூலம் கேள்விகளை கேட்டேன்.

அதற்கு பேரூராட்சி செயல் அலுவலர் பெலிக்ஸ் தொலைபேசியில் எனக்கு மிரட்டல் விடுத்தார். இது தொடர்பாக க.க. சாவடி காவல் நிலையத்திலும், கோவை மாவட்ட ஆட்சியரிடமும் புகார் அளித்தேன். சில நாட்கள் கழித்து அப்போதைய மதுக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தூயமணி வெள்ளைசாமி, வடவள்ளி காவல் ஆய்வாளர் மணிவண்ணன், க.க. சாவடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆனந்தகுமார் உள்ளிட்ட 2 காவலர்கள் எனது வீட்டிற்கு நள்ளிரவில் வந்து விசாரணை எனக்கூறி, வெளியே அழைத்துச் சென்றனர்.

நள்ளிரவு 2 மணி முதல் 4 மணி வரை ஆர்.டி.ஐ.யில் கேள்வி கேட்டதற்காக எனக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் விசாரணை நடத்தினர். மறுநாள் டி.எஸ்.பி.யை சந்திக்க வேண்டுமென சொன்னார்கள். ஆனால் டி.எஸ்.பி.யை சந்திக்க கூட்டிச்செல்லவில்லை. இதுகுறித்து கேட்டதற்கு அலைகழித்தனர்.

இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த மாநில மனித உரிமை ஆணையம் போலீசார் மனித உரிமை மீறலில் ஈடுபட்டதை உறுதி செய்தது.

இதனையடுத்து தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலருக்கு மாநில மனித உரிமை ஆணையம் ஒரு உத்தரவு பிறப்பித்தது. அதில் மனித உரிமை மீறலால் பாதிக்கப்பட்ட ரமேஷ்குமாருக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். அதனை காவல் ஆய்வாளர்கள் தூயமணி வெள்ளைசாமி, மணிவண்ணன் ஆகியோரிடம் இருந்து தலா 25 ஆயிரம் ரூபாயும், உதவி ஆய்வாளர் ஆனந்தகுமாரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாயும் ஊதியத்தில் இருந்து வசூலித்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து ரமேஷ்குமார் கூறுகையில், ”மனித உரிமை ஆணையம் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளது. என்னைப் போன்ற சமூக ஆர்வலர்களுக்கு நம்பிக்கையளிக்கும் தீர்ப்பாக இது உள்ளது. ஆர்.டி.ஐ.யில் கேள்வி கேட்பவர்கள் அலுவலர்கள் மற்றும் காவல் துறையினருக்கு பயப்படத் தேவையில்லை. மனித உரிமை ஆணையம் துணையாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: ஜம்மூ-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடு- வங்கி மேலாளர் சுட்டுக் கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.