சென்னை: சென்னை விமான நிலையத்தில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மத்திய தொகுப்பில் மின்சாரம் கிடைக்கவில்லை என்பதை கூறுவதை விட்டு தமிழ்நாடு அரசு தீர்வு என்ன என்பதை பார்க்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மின் தட்டுபாடு, மின் வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்க வேண்டியது அரசின் கடமை.
மேலும் இரட்டை இலை தொடர்பான விசாரணைக்காக அடுத்த கட்ட சம்மன் எதுவும் அனுப்பவில்லை. கொடநாடு சம்பவத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகரிடம் தான் கேட்க வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வந்தாலே சட்டம் - ஒழுங்கு எப்படி இருக்கும் என்பது தெரியும். திருநெல்வேலியில் போலீஸ் அதிகாரி மீதே தாக்குதல் நடந்து இருக்கிறது என்றால் காவல்துறை விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க:மாமல்லபுரத்தில் கடல் அரிப்பால் வெளிப்பட்ட கோவில்