சென்னை: நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேவுள்ள நத்தம் மான்குட்டையில் நீச்சல் பழகச் சென்ற ஜனனி (14), ரச்சனா ஸ்ரீ (15) ஆகிய பள்ளி மாணவிகள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மாணவிகள் இறப்புக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மாணவிகள் இறப்பு குறித்து அறிந்து மிகுந்த வேதனையுற்றதாகவும், மகள்களை இழந்து வாடும் பெற்றோர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்த மாணவிகளின் பெற்றோருக்கு தலா இரண்டு லட்சம் ரூபாயை, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளதாக அதில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராஜேஷ்