ETV Bharat / state

விரைவில் நிதிநிலை வெள்ளை அறிக்கை வெளியீடு - பழனிவேல் தியாகராஜன் - சென்னை அண்மைச் செய்திகள்

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும், இ-பட்ஜெட் தாக்கல் செய்வதன் மூலம் 2 ஆயிரத்து 500 மரங்கள் பாதுகாக்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்
author img

By

Published : Jul 9, 2021, 7:16 PM IST

சென்னை: முதலமைச்சர் நிவாரண நிதி தொடர்பான www.cmprf.tn.gov.in என்ற இணையதள பக்கத்தை, தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சிக்குப் பின்னர் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “ஜனநாயகத்தின் முக்கியத்துவம் வெளிப்படைத்தன்மை ஆகும். பொறுப்புக்கு வந்தவுடன், முதலமைச்சர் முதலில் எங்களுக்கு கூறிய அறிவுரை, எதையும் மறைக்கக்கூடாது என்பதே ஆகும்.

புதிய இணைய தள பக்கம் அறிமுகம்

முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்து சேர்ந்த நிதி தொடர்பான விவரங்களை வெளிப்படையாக தெரிவிப்பதற்காக, நவீன தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட புதிய இணையதள பக்கம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த இரண்டு மாதத்தில் இதுவரை கரோனாவுக்காக பெறப்பட்ட நிதி, எதற்காக செலவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்த தகவல்கள் அதில் உள்ளன. இதுவரை ரூ. 472 கோடியே 62 லட்சத்து 52 ஆயிரத்து 642 பணம் கரோனா நிதியாக பெறப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு இருந்த நிவாரண நிதிக்கான இணைய பக்கம், பழைய தொழில்நுட்பத்தில் இயங்கியதால் சர்வர் பிரச்னை வந்தது.

இ-பட்ஜெட்டால் 2,500 மரங்களுக்கு பாதுகாப்பு

அதன் காரணமாக தற்போது இணைய பக்கம் நவீன தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. முடிந்தவரை அரசின் அனைத்து விவகாரங்களும், கணினிமயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

இ - பட்ஜெட் கொண்டு வரப்பட்டுள்ளதால் மரங்கள் வெட்டப்படுவதும், காகிதங்களுக்கான செலவுகளும் குறையும். இ-பட்ஜெட் தாக்கல் செய்வதால் 2 ஆயிரத்து 500 மரங்கள் பாதுகாக்கப்படும். இதில் குறைந்தபட்சம் 10 கோடி ரூபாய் அளவுக்கு செலவு மீதம் ஆகும்.

இந்த இணையதளம் பொது மக்களின் வசதி, கருத்துக்கு ஏற்ப உருவாக்கப்பட்டுள்ளது.

அரசு பணிகள் நூறு விழுக்காடு இணையதளம் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை

பி.எம் கேர்ஸ் நிதியில் சேகரமாகும் நிதியின் அளவு, செலவழிக்கப்படும் காரணம் உள்ளிட்ட வெளிப்படைத் தன்மையுடன் அறிவிக்கப்படுவதில்லை. ஆனால், தமிழ்நாடு அரசின் பொது நிவாரண நிதியில் வெளிப்படைத்தன்மை உண்டு.

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன், நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை விரைவில் வெளியிடப்படும். அரசின் அனைத்து பணிகளும் நூறு விழுக்காடு இணையதளம் வாயிலாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இதில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நிதித்துறைச் செயலாளர் கிருஷ்ணன் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிங்க: மேகதாது - அனைத்துக்கட்சி கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.