ETV Bharat / state

டாஸ்மாக் மூலம் ரூ. 45 ஆயிரம் கோடி வருவாய்.. ரூ.50 ஆயிரம் கோடி எதிர்பார்க்கிறோம்.. தமிழ்நாடு நிதித்துறை.. - tasmac revenue in tamil nadu

தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாக நிதித்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம் தெரிவித்தார்.

நிதித்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம்

author img

By

Published : Mar 20, 2023, 4:31 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுபான விற்பனை மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்துள்ளதாகவும், கடந்த ஆண்டு ரூ. 36 ஆயிரம் கோடியாக வருவாய் இருந்ததாகவும், வரும் ஆண்டில் ரூ. 50 ஆயிரம் கோடி வருவாயை எதிர்பார்ப்பதாகவும் நிதித்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, நிதித்துறை செயலாளர் முருகானந்தம் தலைமைச் செயலக வளாககத்தின் நாமக்கல் கவிஞர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

நிதித்துறை கூடுதல் செயலாளர் முருகானந்தம்

அப்போது பேசிய அவர், வரும் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம், நடப்பு ஆண்டைக் காட்டிலும் 9.62 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது, மொத்த மதிப்பு 3 லட்சத்து 65 ஆயிரத்து 321 கோடிக்கான வரவு செலவு திட்டமாக உள்ளது. மாநில அரசின் மொத்த வருவாய் 10 சதவீதம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில், மாநிலத்தின் சொந்த வருவாய் 19.3 சதவீதம் உயர வாய்ப்புள்ளது.

மத்திய அரசின் ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை அதற்கான காலக்கெடுவான 30.6.22 அன்றுடன் முடிந்ததால் இப்போது வருவதில்லை. நடப்பு ஆண்டு ரூ.15 ஆயிரம் கோடி அளவு மத்திய அரசிடமிருந்து வரும் இழப்பீட்டுத் தொகை குறைந்துள்ளது. வரும் ஆண்டில் ரூ.20 ஆயிரம் கோடி அளவு மத்திய அரசிடம் இருந்து வரும் வரி வருவாய் குறைவாக இருக்கும் என்று எதிர்பாக்கிறோம். மொத்தமாக வரும் ஆண்டில் 10.2 சதவீதம் அளவு தமிழ்நாடு அரசின் வருவாய் உயரும். வருவாய் பற்றாக்குறையை தொடர்ந்து குறைத்து வருகிறோம்.

2020-21ஆம் ஆண்டில் ரூ.62 ஆயிரம் கோடியாக வருவாய் உயர்ந்தது. அதன் பின் 2021-22ஆம் ஆண்டில் ரூ.46,538 கோடியாக குறைந்தது. வரும் ஆண்டில் ரூ.30,476 கோடியாக வருவாய் பற்றாக்குறை இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். ரூ. 16 ஆயிரம் கோடி கடந்த ஆண்டை காட்டிலும் வருவாய் பற்றாக்குறை குறைந்துள்ளது. நிதி பற்றாக்குறை மாநிலத்தின் ஜிடிபியில் 3 விழுக்காடாக இருக்கலாம்.

தமிழ்நாட்டில் தொழில் வளம் பின்தங்கிய பகுதிகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் வளமிகு வட்டாரங்கள் என 50 வட்டாரங்களை தேர்வு செய்து முதலீடுகளை மேற்கோள்ள உள்ளோம். மகளிர் உதவித்தொகை பெறும் பயனாளிகளுக்கான தகுதிகள் தொடர்பாக தனியாக வழிமுறைகள் அறிவிக்கப்படும். நில மதிப்பு அதிகரித்துள்ளதால் வங்கிக் கடன் அதிகமாக கிடைக்கும். இல்லம் தேடிக் கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வரும் ஆண்டில் ரூ.8,232 கோடி நீர்வளத் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ரூ.355 கோடி சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. டாஸ்மாக் மூலம் நடப்பு ஆண்டில் ரூ. 45 ஆயிரம் கோடி வருவாய் கிடைத்தது. கடந்த ஆண்டு ரூ.36 ஆயிரம் கோடியாக வருவாய் இருந்தது. வரும் ஆண்டில் ரூ.50 ஆயிரம் கோடி வரும் என்று எதிர்பார்க்கிறோம். கலால் வரி மூலம் ரூ.12 ஆயிரம் கோடியும், வாட் வரி மூலம் ரூ.38 ஆயிரம் கோடி வருவாய் வந்துள்ளது. மத்திய அரசிடமிருந்து ரூ.4,500 ஜிஎஸ்டி இழப்பீடு வரவேண்டியுள்ளது. குறிப்பாக உணவுத் துறையில் ரூ.4 ஆயிரம் கோடி வர வேண்டி உள்ளது. வருவாயை உயர்த்த ஜிஎஸ்டி வசூல், முத்திரைத்தாள் கட்டண வசூல் உள்ளிட்டவற்றை அதிகரித்து வருகிறோம்.

நிலப்பதிவுக் கட்டணத்தை குறைத்ததன் மூலம் ரியல் எஸ்டேட் துறையிலிருந்து ரூ.2 ஆயிரம் கோடி அரசுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும். பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டுவரி மூலம் வரும் ஆண்டில் ரூ.26 ஆயிரத்து 304 கோடி இந்த ஆண்டு கிடைக்கும். நடப்பு ஆண்டு ரூ.23, 486 கோடி கிடைத்தது. வரும் ஆண்டில் ரூ. 75 ஆயிரம் கோடி அளவு கடன் வாங்கப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.

இந்த ஆண்டில் இதுவரை ரூ.72 ஆயிரம் கோடி அளவு கடன் வாங்கியுள்ளோம். இந்த மாதம் நிறைவடையும் போது ரூ.75 ஆயிரம் கோடியாக கடன் வாங்கியிருப்போம். ஒரு ஆண்டில் மாநில அரசு 84 ஆயிரம் கோடி வரை கடன் வாங்கலாம் என்றார். மேலும், வளர்ச்சித் திட்டங்களுக்கு தேவையான நிதி போதுமான அளவு அதிகரித்துள்ளது. தமிழக அரசுக்கு ஜிஎஸ்டி , கலால் வரி , வாட் வரி , பதிவுத்துறை வரி மூலம் அதிக வருவாய் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: ரூ.1000 உரிமைத்தொகை அனைவருக்கும் கிடையாது.. டிடிவி தினகரன் விமர்சனம்..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.