ETV Bharat / state

வெள்ள அபாய குறைப்பு குறித்த திருப்புகழ் குழு இறுதி அறிக்கை சமர்ப்பிப்பு! - தமிழ்நாடு முதலமைச்சரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கையை, அக்குழுவின் தலைவர் திருப்புகழ், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பித்தார்.

Final
Final
author img

By

Published : Mar 14, 2023, 4:12 PM IST

சென்னை: சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில், சென்னை வெள்ள இடர் தணிப்பு மேலாண்மை குழு அமைக்கப்பட்டது. இக்குழு சென்னை பெருநகர பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருப்பதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

இந்த நிலையில், சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை குறித்த ஆலோசனைக் குழுவின் இறுதி அறிக்கை, இன்று(மார்ச்.14) தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. சென்னை தலைமைச் செயலகத்தில், ஆலோசனைக் குழுவின் தலைவர் திருப்புகழ், முதலமைச்சரிடம் அறிக்கையை சமர்ப்பித்து, அறிக்கையின் விவரங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

அப்போது அரசு அதிகாரிகள் முன்னிலையில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனாவை சமாளிக்க, அரசு முழு வேகத்தில் செயல்பட்டது. அதன் பிறகு, உடனே பெருமழை காரணமாக அரசுக்கு ஒரு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. அதனை எதிர்கொண்டவுடன், இதற்கு நிரந்தர தீர்வு காணவேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் அரசின் அனைத்துத் துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு, நானும், அமைச்சர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அனைவரும் தொடர்ந்து மேற்பார்வை செய்து 80 சதவீத பணிகளை முடித்ததால், கடந்த பருவமழையின்போது சென்னையில் தண்ணீர் தேங்காமல் இருந்தது. இதனால் அரசுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

அந்த நற்பெயருக்கு முக்கிய காரணங்களில் ஒன்று திருப்புகழ் குழுவின் செயல்பாடுகள். இதற்கு முழுமையாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் இந்த வெள்ளப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண உழைத்த திருப்புகழுக்கும், குழுவின் உறுப்பினர்கள் ஜனகராஜ், அறிவுடைநம்பி, இளங்கோ, பாலாஜி நரசிம்மன், காந்திமதிநாதன், ராஜா, முருகன், ஜெய்சங்கர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு முதலமைச்சர் என்ற முறையில் நான் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். நம்முடைய அரசு உங்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளது. தொடர்ந்து அரசுடன் நீங்கள் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை பெருநகர வெள்ள அபாயத்தைக் குறைத்தல் மற்றும் மேலாண்மை ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, கூடுதல் தலைமைச் செயலாளர் எஸ்.கே. பிரபாகர், நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாஹூ மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: "போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படியை உடனே வழங்குக" - மருத்துவர் ராமதாஸ் வலிறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.