சென்னை: சிவா மனசுல, புஷ்பா உட்பட பல திரைப்படங்களை தயாரித்தவர் வாராகி (46). இவர் விருகம்பாக்கம் நடேசன் நகரில் அமைந்துள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.இவர் அதே குடியிருப்பில் வசித்து வரும் சுஜிதா(31) என்ற பெண்ணை திருமணம் செய்துக்கொள்ளுமாறு நீண்ட மாதங்களாக வற்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மன உளைச்சல் அடைந்த சுஜிதா வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வாராகி மீது புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் தயாரிப்பாளர் வாராகியை கைது செய்தனர். அவர் மீது பெண் வன்கொடுமை சட்டம், பொது இடத்தில் ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உட்பட 6 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.
ஏற்கனவே வாராகி மீது சேலையூர் உள்ளிட்ட 4 காவல் நிலையங்களில் வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட வாராகியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க:ஓய்வுபெற்ற டிஎஸ்பி காரில் மதுக் கடத்தல்: சினிமா தயாரிப்பாளர் கைது!