ETV Bharat / state

ஆர்.என்.ரவி ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் செய்கிறார்: இயக்குநர் பா.ரஞ்சித்

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் ஆளுநர் வேலையை விட்டுவிட்டு பிற வேலைகளை மட்டுமே செய்து வருவதாக இயக்குநர் பா.ரஞ்சித் விமர்சனம் செய்துள்ளார்.

pa Ranjith
இயக்குனர் பா.ரஞ்சித்
author img

By

Published : Apr 7, 2023, 1:47 PM IST

"ஆர்.என் ரவி ஆளுநர் வேலையை தவிர மற்ற எல்லா வேலையும் செய்கிறார்" - இயக்குனர் பா.ரஞ்சித் குற்றச்சாட்டு

சென்னை: இயக்குநர் பா.ரஞ்சித் நடத்தும் நீலம் கலாச்சார மையம் சார்பில் தலித் வரலாற்று மாத கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக வானம் கலைத் திருவிழா - பி.கே ரோசி திரைப்பட திருவிழா இன்று துவங்கியது. ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 9 வரை ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைப் பேசும் திரைப்படங்கள் திரையிடப்படுகிறது. அதன் துவக்க நிகழ்ச்சி சென்னை சாலிகிராமம் பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர்கள் மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் மற்றும் தியாகராஜன் குமாரராஜா, லெனின் பாரதி, ஷான் உள்ளிட்ட பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் பா.ரஞ்சித், "அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தலித் மாதம் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கமே மறைக்கப்பட்ட வரலாற்றைத் தெரிந்து கொள்வது, சமகால சூழலில் தலித்துகள் பங்கு என்னவாக இருக்கிறது. இதை எப்படிப் புரிந்து கொள்வது, இதைத் தனியாக அடையாளங்காட்ட வேண்டிய தேவை இருக்கிறது என்பதைக் காட்டுகிறோம்.

இந்த மாதத்தில் நிறைய நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தற்போது சிறியதாக இதைத் துவக்கி உள்ளோம். 3 நாட்களில் சில முக்கியமான திரைப்படங்கள் திரையிடப்பட்டு அதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயத்தைப் பேச உள்ளோம். வரலாற்றை யார் எழுதுகிறார்கள். வரலாற்றில் நாம் யார்?... எது கலாச்சார புரட்சி. நிறைய இடங்களில் அதிகாரத்துக்கு எதிராகப் போராடுகிறார்கள் என்பது பல இடங்களில் நடக்கிறது என்று கூறினார். மேலும் இந்த அடையாளம் என்பது ஜாலிக்காக இல்லாமல் இது தான் எனக்கான பாதை, எனது வழி என்று இருக்கும் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்" என தெரிவித்தார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் குமாரராஜா, "எனக்கும் பி.கே ரோசி யாரென்று தெரியவில்லை. இவர்கள் சொன்ன பிறகு தெரிந்து கொண்டேன். உங்களுக்கு விடுக்கும் வேண்டுகோள், போராட்டத்தை நிறுத்த கூடாது. நம் குரல் கேட்கும் வரை போராடிக் கொண்டே இருக்க வேண்டும். அதற்கான முயற்சி தான் இது" என்று கோரிக்கை விடுத்தார்.

நிகழ்ச்சி மேடையில் பேசிய இயக்குநர் மாரி செல்வராஜ், "தொடர்ந்து யோசிக்கும், எழுதும் படங்களில் இதைப் பற்றித் தான் பேசி கொண்டு இருக்கிறோம். எமோஷனல், வாழ்க்கை, வலி தான் இருக்கும். படியேறும் பெருமாளை எடுப்பதற்கு முன் எப்படி எந்த மாதிரியாக எடுப்பது என்று தெரியவில்லை. நமக்கு முன் எந்த மாதிரியாக மனிதர்கள் வந்தார்கள், இருந்தார்கள் என்பதற்கான மூலாதாரம் எதுவும் இல்லை.‌ ஆனால் இப்போது அந்த மூலாதாரம் இருக்கிறது" என்றார்.

அதைத் தொடர்ந்து நிகழ்ச்சி மேடையில் பேசிய பாடகர் அறிவு, "வானம் கலைத் திருவிழா - தலித் வரலாற்று மாதத்தில் சந்திப்பது மகிழ்ச்சி. சிறுவயது முதல் திரைப்படம் பார்த்து வளர்ந்ததும் இல்லை. ஆனால் இப்போது எல்லாரும் டிவி பார்க்கிறார்கள். நான் பார்த்த சினிமாக்கள், குறிப்பாக பா.ரஞ்சித் படங்கள் எனக்குக் கண்ணைத் திறந்தது போன்று முக்கியமான ஒன்றாக இருந்தது. இவர்கள் மக்களுக்காகப் போராடி வரும் மக்கள் கலைஞர்கள். திரைப்படங்கள் சமுதாயத்தில் முக்கியமான விஷயங்களைக் காட்டுகிறது. நமக்கான கலை விஷயங்களை மேம்படுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சி இருக்கும்" என்றும் கூறினார்.‌

பின்னர் செய்தியாளர்களிடம் பா.ரஞ்சித் கூறுகையில், அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு இந்தியா முழுவதும் தொடர்ந்து தலித் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. கலை ரீதியாகப் பண்பாடு ரீதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறோம். மேலும் தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக ஆளுநர் ஆர்.என் ரவி பேசிய கருத்து குறித்துப் பேசிய அவர், ஆளுநர் வேலையைத் தவிர மற்ற வேலைகளை அவர் செய்து வருகிறார். தொடர்ந்து பல்வேறு கருத்துகள் பேசி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறார். இது தவறானது எனவும், தங்கலான் படம் 80 சதவீதம் முடிந்து விட்டது. மே மாதம் மற்ற வேலைகள் முடிந்து விடும். இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும். vfx வேலைகள் நிறைய உள்ளது என்றார்.

தற்போது கமல்ஹாசன் உடன் இணையும் திரைப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகள் தான் போய்க்கொண்டு உள்ளது. சார்பட்டா பரம்பரை 2 ஆம் பாகமும் தற்போது கதை வேலைகள் தான் நடந்து வருகிறது என்றார். பின்னர் சந்தோஷ் நாராயணன் டுவீட் குறித்துப் பேசியவர், வாய்ப்பு இருந்தால் சந்தோஷ் நாராயணன் அவருடன் இணையலாம். அவர் நல்ல மனசுக்காரர் அதனால் வாழ்த்து சொன்னார். தற்போது வரை அவருடன் இணைவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை என தெரிவித்தார்.

ரோகிணி திரையரங்கில் நடந்த சர்ச்சை குறித்து பேசியவர், ரோகிணி திரையரங்கில் நடந்தது மட்டும் தான் வெளியே தெரிகிறது. மற்ற இடங்களில் நடப்பது தெரியவில்லை. புதுக்கோட்டை வேங்கை வயல் சம்பவம் தொடர்பாகச் சீமான் பேசிய கருத்து தொடர்பாகப் பதில் அளித்தவர், எல்லாருக்கும் பயன்படும் வகையில் குடிநீர்த் தொட்டி அமைத்தால் நன்றாகத் தான் இருக்கும். ஆனால் அதிலும் சில பொது பிரச்சினைகள் இருக்கிறது. அதனால் அவர்களுக்காகத் தனியாவாவது குடிநீர்த் தொட்டி அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.