சென்னை: 16ஆவது சட்டப்பேரவைக் கூட்டம் நேற்று முன்தினம்(ஜூன் 21) ஆளுநர் உரையுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆகியோர் இன்று(ஜூன் 23) சட்டப்பேரவையில் தாக்கல் செய்கின்றனர்.
நேற்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது. இன்றும் அதன் தொடர்ச்சியாக மூன்றாம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.
மூன்றாம் நாள் சட்டப்பேரவைக் கூட்டம்
இன்றைய கூட்டத்திலும் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதையடுத்து உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தல் நடத்தப்படாத மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் பணிபுரியும் தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிக்கும் சட்ட மசோதாக்கள் இன்று சட்டப்பேரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளன.
2021ஆம் ஆண்டு தமிழ்நாடு நகராட்சி மற்றும் ஊராட்சிகளின் சடங்குகளுக்கான சட்டமுன்முடிவை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என். நேரு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆகியோர் அறிமுகம் செய்வர்.
இதைத்தொடர்ந்து பல்வேறு அரசு துறைகளில் மத்திய தணிக்கை துறை (CAG) மேற்கொண்ட தணிக்கை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட உள்ளது.
இதையும் படிங்க: சட்டப்பேரவை கூட்டத்தொடரின் 3ஆவது நாள் கூட்டம்...!