சென்னை: அஜா்பைஜானில் உள்ள பாகு நகரில் நடைபெறும் உலகக் கோப்பை செஸ் போட்டியில் இந்தியாவின் ஆா்.பிரக்ஞானந்தா - நாா்வேயின் மேக்னஸ் கார்ல்சென் ஆகியோா் மோதும் இறுதிச்சுற்றின் 2வது ஆட்டம் நேற்று ‘டிரா’வில் முடிந்த நிலையில், வெற்றியாளரை தீா்மானிப்பதற்கான 2 டை-பிரேக்கா் ஆட்டங்களில் இன்று விளையாடுகின்றனா்.
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு (FIDE) என்ற செஸ் கூட்டமைப்பு என்பது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக செஸ் நிறுவனமாகும். இதன் சார்பில், இந்தாண்டு, 10வது சதுரங்க உலகக் கோப்பை 2023, கடந்த ஜூலை 30-ஆம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெறுகிறது. இதில் பல்வேறு நாடுகளில் இருந்து 206 வீரர்கள் இதில் கலந்துக் கொண்டனர். ஒற்றை முறை எளிமினேஷன் முறையில் ஆட்டங்கள் நடைபெற்று தற்போது, இறுதி போட்டியின் இரண்டாவது சுற்று நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்றது. இரண்டாவது சுற்று ஆட்டத்தின் 30 ஆவது நகர்வில் இருவரும் மீண்டும் சமன் செய்ய முன் வந்த நிலையில், இன்று (ஆகஸ்ட்-24) டைபிரேக்கர் சுற்றுப் போட்டி நடைபெறவுள்ளது.
இந்த தொடரில் இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 வயது கிராண்ட்மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா, கடந்த 21ம் தேதி நடைபெற்ற அரையிறுதியின் டைபிரேக் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 2வது இடம் வகிக்கும் அமெரிக்காவின் ஃபேபியானோ கருவானாவை வீழ்த்தி செஸ் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார். இதற்கு முன் பல சர்வதேசப் போட்டிகளிலும் சாதனை படைத்துள்ளார்.
21 ஆண்டுகளுக்கு பிறகு: தற்போது நடைபெற்று வரும் உலக கோப்பை செஸ் தொடரில், இறுதிப்போட்டிக்குள் நுழைந்து இருக்கிறார் பிரக்ஞானந்தா. 2002ம் ஆண்டு விஸ்வநாதன் ஆனந்துக்கு பிறகு 21 ஆண்டுகள் கழத்து, உலக செஸ் போட்டியில் இறுதிசுற்றை எட்டிய இந்தியர் என்ற தனிச் சிறப்பை பெற்றுள்ளார் பிரக்ஞானந்தா.
டை பிரேக்கர் என்றால் என்ன: செஸ் போட்டியில் எப்படி டைபிரேக்கர் நடத்தப்படும் என்ற சந்தேகம் பலருக்கும் ஏற்பட்டுள்ளது. எப்படி, டென்னிஸ் தொடரில் டிரா ஏற்பட்டால், டைபிரேக்கர் நடத்தப்படுமோ, அதேபோல் தான் செஸ் போட்டிகளுக்கும் நடைபெறும். ஆனால் செஸ் போட்டியில் நடக்கும் டைபிரேக்கர் சுற்று, ”ரேபிட்” ரவுண்ட்களாக சதுரங்க போட்டி நடத்தப்படும்.
டை பிரேக்கரில், குறிபிட்ட நேரத்திற்குள் விளையாடி முடிக்க வேண்டும். அந்த வகையில் டைபிரேக்கர் சுற்றின் ஒவ்வொரு ஆட்டங்களும், இரு ஆட்டங்களாக நடைபெறும். கறுப்பு காய்களுடன் ஒரு முறையும், வெள்ளை காய்களுடன் ஒரு முறையும் இரு வீரர்களும் விளையாடுவார்கள். அந்த வகையில் டைபிரேக்கரின் முதல் ரவுண்டில் இரு வீரர்களுக்கு தலா 25 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கும் தலா 10 வினாடிகள் கூடுதலாக (Bonus Seconds) வழங்கப்படும்.
அவ்வாறு 2 டைபிரேக்கா் ஆட்டங்களும் டிரா ஆகும் பட்சத்தில், அடுத்து இரு ஆட்டங்கள் விளையாடப்படும். அதில் 2 போட்டியாளா்களுக்கும் தலா 5 நிமிடங்கள் ஒதுக்கப்படும். ஒவ்வொரு நகா்த்தலுக்கும் 3 விநாடிகள் கூடுதலாக கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியும் வெற்றியாளரை கண்டறிய முடியாவிட்டால், கடைசியாக "சடன் டெத்" (sudden death time) என்ற முறையில் ஆட்டம் நடக்கும். அதில் ஒரு போட்டி மட்டுமே நடக்கும். அந்தப் போட்டியில் யார் வெற்றிபெறுகிறார்களோ, அவரே வெற்றியாளராகவே அறிவிக்கப்படுவார். அந்த ஆட்டத்திற்கு தலா 3 நிமிடங்கள் மற்றும் ஒவ்வொரு நகர்வுக்கு கூடுதலாக 1 வினாடிகள் வழங்கப்படும்.
மேக்னஸ் கார்ல்சென் வியூகம்: கடந்த 2016-ஆம் ஆண்டு செர்கே கர்ஜாகின் உடனாக ஆடும் போது, இறுதி போட்டியில், இரண்டு முறை டிரா செய்து, டைபிரேக்கரில் எளிதாக வென்று தன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார் கார்ல்சென். 32 வயதான கார்ல்சென் இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் விமர்சனம்: "மேக்னஸ் கார்ல்செனிடம் இருந்து இப்படியொரு தொடக்கத்தை எதிர்பார்க்கவில்லை. அவர் டிராவை நோக்கி போட்டியை ஆரம்பித்துள்ளார். 2016ம் ஆண்டு நடைபெற்ற உலக செஸ் போட்டியில் 12வது ஆட்டத்தில், பயன்ப்படுத்திய வியூகத்துடன் ஆட்டத்தை மேக்ன்ஸ் கார்ல்சன் நகர்த்துகிறார். நேற்றும் அவர் இதே போன்றுதான் ஆட்டத்தை விளையாடி உள்ளார். மேலும், நேற்றைய தினம் முழுவதும் மேன்ஸ் கார்ல்சன் டை பிரேக்கர்ருக்காக யோசித்தார் என்று அவரது எக்ஸ் பக்கத்தில்(முன்னதாக ட்விட்டர்) பதிவிட்டுள்ளார்.
இது குறித்து பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளர் ஆர்.பி.ரமேஷை தொடர்புக் கொண்டு பேசுகையில், "நேற்றைய ஆட்டம் என்பது, சிறப்பான ஆட்டம், இருவரும், தங்களின் திறமையை வெளிக்கொண்டு வந்தனர். என்னுடைய பார்வையில், எளிதாக நேற்றைய ஆட்டத்தை மேக்ன்ஸ் கார்ல்சன் ட்ராவில் கொண்டுவந்து விட்டார் என்றார். மேலும் தொடர்ந்து பேசிய அவர், இன்றைய ஆட்டம், விறுவிறுப்புக்கும் பஞ்சமின்றி நடைபெறும். மேக்னஸ் கார்ல்சன் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். அதனால் அவரை எதிர்கொள்ளும் பிரக்ஞானந்தாவின் செயல்பாடு இதில் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது வருகிறது. மேலும், கார்ல்சனின் திட்ட வகுப்பு எப்படி என்று இன்றைய ஆட்டத்தில் தான் தெரியும்" என தெரிவித்தார்.
தாயை விட பெரிய சக்தி எதுவும் இல்லை: பிரக்ஞானந்தா தாயார் நாகலட்சுமி தான் அவரை போட்டி நடக்கும் இடங்களுக்கு எல்லாம் அழைத்து சென்று வருகிறார். தற்போது கூட மகனின் வெற்றியை தூரம் நின்று ரசிக்கிற நாகலட்சுமியின் புகைப்படமும், அவர் தனியாக தன் மகனின் வெற்றிக்காக கண்ணீர் சிந்திய புகைப்படமும் இணையத்தில் வைரலானது. மேலும், முன்னாள் உலக சாம்பியனான கேரி காஸ்பரோவ் தனது சமூக வலைதளத்தில், பிரக்ஞானந்தாவையும், அவரின் தாயையும் பாரட்டி பதிவிட்டுள்ளார்.
வெற்றி யாருக்கு: ரேபிட் எனப்படும் டைபிரேக்கர் ஆட்டத்தில், கார்சலனை 3 முறை பிரக்ஞானந்தா வீழ்த்தி உள்ளார். மேலும் இந்த தொடரில், ஹிக்காரு நக்கமுரா, ஃபேமினோ கருணா, அர்ஜூன் எரிகல்ஸி, ஆகியோர்களை பிரக்ஞானந்தா இந்த டைபிரக்கேரில் வீழ்த்தி உள்ளார். அதேப்போல் கார்ல்சன் வின்சென்ட் கீமரை ஒரு முறை தான் வீழ்த்தி உள்ளார். இன்று நடைபெறும் ஆட்டத்தில், மேக்னஸ் கார்ல்சனின் வியூகத்தை பிரக்ஞானந்தா எளிதில் எதிர்கொண்டு தன் வெற்றியை அடைவாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
பிரக்ஞானந்தா vs மேக்னஸ் கார்ல்சென்: இதுவரை இருவரும் நேருக்கு நேர் 19 போட்டிகளில் விளையாடி உள்ளனர். இதில் 6 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. மேலும், 8 போட்டிகள் மேக்னஸ் கார்ல்செனும், 5 போட்டிகள் பிரக்ஞானந்தாவும் வெற்றி பெற்று உள்ளனர்.
இரண்டாவது சாதனையை நோக்கி இந்தியா: இந்தியா ஜூலை 14ஆம் தேதி மதியம் 2:35 மணிக்கு தொடங்கிய சந்திரயான் 3இன் சாதனைப் பயணம் 40 நாட்கள் நெடும் தூர பயணத்திற்குப் பிறகு நிலாவில் நேற்று மாலை 6:04 மணிக்கு தரையிறங்கி சாதனையை படைத்தது. இந்தியா தற்போது, செஸ் உலக கோப்பையின் இறுதி போட்டியில், பிரக்ஞானந்தாவின் வெற்றியை நோக்கி உலக பார்வை இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது. இதில் வெற்றிபெற்றால், இந்தியாவின் புகழ் உலகம் எங்கும் பேசப்படும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இதையும் படிங்க: ஒருநாள் உலக கோப்பை பயிற்சி அட்டவணை வெளியீடு! இங்கிலாந்து, நெதர்லாந்தை சந்திக்கிறது இந்தியா..!