ETV Bharat / state

தமிழ்நாட்டில் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு - தென்னக ரயில்வே

தமிழ்நாட்டில் பண்டிகை கால 20 சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிக்கப்படுவதாக, தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டிகை கால சிறப்பு ரயில்
பண்டிகை கால சிறப்பு ரயில்
author img

By

Published : Dec 26, 2020, 7:45 PM IST

Updated : Dec 26, 2020, 7:50 PM IST

சென்னை: 4 தினசரி சிறப்பு ரயில்கள், 4 வாரத்திற்கு இருமுறை இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் மற்றும் 12 வாராந்திர சிறப்பு ரயில்கள் என மொத்தம் 20 பண்டிகை கால சிறப்பு ரயில் சேவைகள் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின் வழக்கமாக இயக்கப்படும் ரயில்களுக்குப் பதிலாக குறிப்பிட்ட வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்கள் அதிகம் சென்று வரும் பல்வேறு வழித்தடங்களில் இந்த பண்டிகைகால சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுகின்றன.

முன்னதாக வெளியிடப்பட்ட இந்த பண்டிகை கால சிறப்பு ரயில்கள் குறித்த அறிவிப்பின் படி, ரயில்களின் சேவை முடிவுக்கு வந்த நிலையில், 20 ரயில்களின் சேவை மேலும் சில காலத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

பண்டிகை கால சிறப்பு ரயில்கள் சேவை நீட்டிப்பு குறித்த அறிக்கை

அதன்படி தினசரி சிறப்பு ரயில்களில், கொச்சுவெலி- மைசூரு சிறப்பு ரயில் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மைசூரு- கொச்சுவெலி சிறப்பு ரயில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 1ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மங்களூரு- லோகமனிய திலக் சிறப்பு ரயில் அடுத்த ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி வரையும், மறு மார்க்கத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நேர மாற்றம் செய்யப்பட்ட ரயில்களின் விவரங்கள்

வாரம் இருமுறை இயக்கப்படும் ரயில்களில், நாகர்கோவில் - மும்பை சிறப்பு ரயில் ஜனவரி 1ஆம் தேதி வரையும், மும்பை-நாகர்கோவில் ரயில் பிப்ரவரி 1ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டு, தலா 9 ரயில்கள் கூடுதலாக இயக்கப்படவுள்ளன.

வாராந்திர சிறப்பு ரயில்களில், மதுரை-பிக்னேர் ரயில் ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், எழும்பூர்-ஜோத்பூர் சிறப்பு ரயில் ஜனவரி 30ஆம் தேதி வரையும், மறு வழியில் பிப்ரவரி 1ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி தாதர் சிறப்பு ரயில் சேவை ஜனவரி 27ஆம் தேதி வரையும், மறு வழயில் ஜனவரி 28ஆம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல், காந்திதம்- திருநெல்வேலி கூடுதல் கட்டண சிறப்பு ரயில் சேவை ஜனவரி 28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பயணிகள் வருகை குறைந்ததால் சென்னை எழும்பூர்- மதுரை தேஜஸ் ரயில் ஜனவரி 4ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை சென்ட்ரல் - கோவை, நாகர்கோவில் -மும்பை, எழும்பூர்- கன்னியாகுமரி, கன்னியாகுமரி-எழும்பூர் உள்ளிட்ட 25 சிறப்பு ரயில்களின் பயண நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெல்லியில் டிரைவரில்லா மெட்ரோ பயணம் டிச.28 தொடக்கம்!

Last Updated : Dec 26, 2020, 7:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.